PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மனித எலும்புக்கூடு பின்வரும் கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.
 
எலும்புகள்: இது உடலின் கடினமான கட்டமைப்புகளை உள்ளடக்குகின்றன.
 
குருத்தெலும்பு: இது ஆதாரமும், இணைப்பும் அளிக்கும் தசைகளாகும்.
Example:
வெளிப்புற காது மற்றும் மூக்கின் நுனிப்பகுதி.
தசைநார்கள்: இது இருவேறு எலும்புகளை இணைக்கும் திசுக்களின் இழை நாண்களாகும்.
 
YCIND20220901_4386_Movements in animals_01.png
எலும்பின் வகைகள்
 
மனித எலும்பு மண்டலத்தின் பல்வேறு வகையான எலும்புகள் உள்ளன. அவை பின்வருமாறு,
 
நீண்ட எலும்புகள்:
 
இவ்வகை எலும்புகள் கால்களிலும் கைகளிலும் காணப்படும்.
 
குறுகிய எலும்புகள்:
 
இவ்வகை எலும்புகள், முதுகெலும்புத் தொடர்  மற்றும் மணிக்கட்டு பகுதியில் காணப்படும்.
 
தட்டையான எலும்புகள்:
 
இவ்வகை எலும்புகள், விலா எலும்புகள், மண்டை ஓடு, தோள்பட்டை மற்றும் இடுப்பு பகுதிகளில் காணப்படும்.
 
ஒழுங்கற்ற எலும்புகள்:
 
இவ்வகை எலும்புகள் , முதுகெலும்பு, முதுகு எலும்புத் தொடர், அண்ணம், கீழ்த்தாடை, தாழ்வான நாசிக்குழாய், நாவடி வளை எலும்பு போன்ற பாகங்களில் காணப்படுகின்றது.