PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மண்டை ஓடு:
 
shutterstock_1020357439.jpg
மண்டை ஓடு
  • மண்டை ஓடு சிறிய எலும்புகளாலான கடினமான ஓர் அமைப்பாகும்.
  • இது \(22\) வெவ்வேறு சிறிய எலும்புகளாலானது.
  • அதிலிருந்து \(8\) எலும்புகள் ஒன்றாக இணைவதன் மூலம் கிரேனியம் என்ற அமைப்பு உருவாகின்றது.
  • மீதமுள்ள \(14\) எலும்புகள் ஒன்றாகச் சேர்ந்து முகத்தை உருவாக்குகின்றன.
  • மனித உடலில் அசையும் மூட்டு கொண்ட ஒரே எலும்பு கீழ்த்தாடை எலும்பாகும். எனவே, இது நகரக் கூடிய மூட்டு என அழைக்கப்படுகிறது. இவை, தசைகள், தசைநார்களால் தாங்கப்படுகின்றது.
  • அதுமட்டுமல்லாமல், முதுகெலும்பின் மேற்புறத்தில் அமைந்திருக்கும் மண்டை ஒட்டினை நம்மால் மேலும், கீழும், பக்கவாட்டிலும் நகர்த்த இயலும்.
YCIND20220816_4262_Human organ systems_2.jpg
மண்டை ஓடு
 
மார்பெலும்பு அல்லது விலா எலும்பு:
 
shutterstock_365003318.jpg
மார்பெலும்பு
  • மார்பு பகுதியில் உள்ள விலா எலும்பு கூம்பு வடிவ அமைப்பில் \(12\) ஜோடி எலும்புகளைக்  கொண்டது.
  • மார்பெலும்புகள் பின் பகுதியில் இருக்கும் முதுகெலும்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். எனவே, அவை பார்ப்பதற்குக் கூண்டு போன்று காணப்படும்.
  • முன் பகுதியில் \(10\) ஜோடி எலும்புகள் மார்புடன் இணைந்தும் \(2\) ஜோடி எலும்புகள் தனித்துக் காணப்படும்.
  • தனித்துள்ள \(2\) ஜோடி எலும்புகள் மிதக்கும் எலும்புகள் என அழைக்கப்படும்.
  • சுவாசித்தலின் போது சுருங்கி விரிவடையும் விதத்தில் விலா எலும்புகள் அமைந்திருக்கும். மேலும், இவை நுரையீரல், இதயம், கல்லீரல் போன்ற உறுப்புகளை மூடிப் பாதுகாக்கும் பணியினையும் மேற்கொள்கிறது.
YCIND20220816_4262_Human organ systems_1.png
மார்பெலும்பு
 
Important!
ஒட்டகச்சிவிங்கி மற்றும் மனித உடலின் கழுத்து பகுதியில் ஒரே எண்ணிக்கையில் தான் எலும்புகள் உள்ளன. ஆனால், ஒட்டகச்சிவிங்கியின் உள்ள  முதுகெலும்புகள் மிகவும் நீளமாக இருக்கும்.