PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இருபாலரின் உடலிலும் இனப்பெருக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் உள்ள முதன்மை ஹார்மோன்கள் ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகும். இவை ஸ்டீராய்டு ஹார்மோன்கள் என்றும் அழைக்கப்படும். இந்த ஹார்மோன்கள் ஆண்தன்மை, பெண்தன்மை, கர்ப்பகால உடல் மாற்றங்கள் முதலியவை ஏற்படக் காரணம் ஆகின்றன.
 
YCIND202208104271Humanorgansystems041w6382.png
நாளமில்லா சுரப்பி மண்டலம்
 
இருபாலரின் உடலிலும் இனப்பெருக்கம், அதன் நடத்தைகள் மற்றும் மாற்றங்கள் அவற்றை முடிவு செய்வது பின்வரும் ஹார்மோன்கள் ஆகும்.
  • LH - லூட்டினைசிங் ஹார்மோன்
  • FSH - பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன்
பாலிக்கிள்களைத் தூண்டும் ஹார்மோன் (FSH)
  • பெண்களின் உடலில் கிராபியன் பாலிக்கிள் FSH ஹார்மோன் உடல் வளர்ச்சியைத்  தூண்டி விடுகிறது. 
  • உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி செய்ய பயன்படுவது FSH ஹார்மோன் ஆகும்.
  • ஆண்களின் உடலில் விந்து நாளங்கள், அதன் வளர்ச்சி மற்றும் விந்தணு உற்பத்தி செய்ய FSH ஹார்மோன்  மிகவும் அவசியம் ஆகும்.
லூட்டினைசிங் ஹார்மோன் (LH)
 
பெண்களின் உடலில் பின்வரும் மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கு லூட்டினைசிங் ஹார்மோன் தேவைப்படுகிறது.
  • அண்டம் விடுபடுதல் ஏற்பட லூட்டினைசிங் ஹார்மோன் தேவைபடுகின்றது.
  • கார்பஸ் லூட்டியம் உருவாக்கம் நடைபெற மிகவும் அவசியம்.
  • லூட்டியல் ஹார்மோன் எனப்படும் புரோஜெஸ்ட்டிரான் உற்பத்தி செய்ய இந்த ஹார்மோன் மிகவும் அவசியம் ஆகும்.
  • கிராபியன் பாலிக்கிள் என்பதே இந்த ஹார்மோனின் இறுதி முதிர்வு நிலை ஆகும்.
ஆண்களின் உடலில் இடையீட்டுச் செல்களைத் தூண்டி டெஸ்ட்டோஸ்டீரானை உற்பத்தி செய்கின்றது. இந்த ஹார்மோன் விந்தகங்களில் காணப்படுகின்றது. 
Important!
ஈஸ்ட்ரோஜன் என்பது ஒரு தனி ஹார்மோன் அல்ல. பல ஸ்டீராய்டு ஹார்மோன்கள் சேர்ந்த ஹார்மோன்களின் தொகுப்பு ஆகும். மேலும் இது ஒன்றுக்கு ஒன்று தொடர்புடைய ஹார்மோன் தொகுப்பு ஆகும்.
புரோலாக்டின் (PRL) அல்லது லாக்டோஜெனிக் ஹார்மோன்
 
பெண்களின் பிரசவ காலத்திற்கு பின் பாலூட்டும் காலத்தில் குழந்தைக்கு தேவையான பாலை உற்பத்தி செய்வது இந்த ஹார்மோனின் பணி ஆகும்.
 
ஆக்ஸிடோசின் ஹார்மோன்
  • இந்த ஹார்மோன் தான் பெண்களின் மார்பகங்களில் இருந்து பால் வெளியேற காரணம் ஆகும்.
  • பிரசவ நேரத்தில் குழந்தை எளிதாக வெளியேற தசைகளை சுருங்க செய்து குழந்தை பிறப்பை எளிமையாக்குவது ஆக்ஸிடோசின் ஹார்மோனின் பணி ஆகும்.