PDF chapter test TRY NOW

நாம் தரையின் மீது நடக்கும்போது கீழே விழாமல் நடக்கிறோம். ஆனால், ஈரமான தளங்களின் மீது நடக்கும்போது கீழே விழ வாய்ப்பு உள்ளது.
 
ஏன்?
 
தரைக்கும் நமது கால்களுக்கும் இடையே காணப்படும் உராய்வு விசை காரணமாகவே, நாம் கீழே விழாமல் நடக்க முடிகிறது. ஆனால், இந்த உராய்வு விசை ஈரமான தளத்தின்மீது நடக்கும்போது குறைவாக இருப்பதால் நாம் கீழே விழுவதற்கு வாய்ப்பு உள்ளது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட, ஒன்றையொன்று தொடும் பொருள்கள், ஒன்றைச் சார்ந்து மற்றொன்று இயங்கும்போது அல்லது இயங்க முயற்சிக்கும்போது அவற்றிற்கு இடையே உராய்வு அல்லது உராய்வு விசை உருவாகிறது.
உராய்வு விசையானது எப்போதும் பொருளின் இயக்கத்திற்கு எதிர்த்திசையில் செயல்படும்.
 
இந்த உராய்வு விசை ஒப்புமை இயக்கத்தில் இருக்கும் பொருள்களின் ஒழுங்கற்ற வடிவியல் பரப்பின் காரணமாக உருவாகிறது.
 
உராய்வின் விளைவுகள்:
 
உராய்வு பின்வரும் விளைவுகளை ஏற்படுத்துகிறது.
  • உராய்வு இயக்கத்தை எதிர்க்கிறது.
  • உராய்வு தேய்மானத்திற்குக் காரணமாக இருக்கிறது.
  • உராய்வு வெப்பத்தை உருவாக்குகிறது.