PUMPA - THE SMART LEARNING APP
Helps you to prepare for any school test or exam
Download now on Google Playதிரவங்களால் செலுத்தப்படும் அழுத்தம்:
திரவமானது கொள்கலனின் அடிப்பாகத்தில் மட்டுமல்ல, அதன் சுவர்களின் மீதும் அழுத்தத்தைச் செலுத்துகிறது.
திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தம் உற்றுநோக்கும் புள்ளியின் ஆழத்தைச் சார்ந்து உள்ளது.
கீழேக் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடானது, திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தம் மற்றும் உற்றுநோக்கும் புள்ளியின் ஆழத்திற்கும் இடையே உள்ளத் தொடர்பை விவரிக்கிறது.
செயல்பாடு:

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அதன் ஒரு பக்கத்தில் வெவ்வேறு உயரங்களில் மூன்று துளைகள் இடவும்.
பாட்டிலை நீரால் நிரப்பி, துளைகளின் வழியாக வெளியேறும் நீரை உற்று நோக்கவும்.
அடிப்பாகத்திலுள்ள துளை வழியாக நீர் அதிக விசையுடன் வெளியேறுகிறது.
மேற்புறம் உள்ள துளை வழியாக குறைந்த விசையுடன் நீர் வெளியேறுகிறது.
இந்தச் செயல்பாட்டின் மூலம் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க திரவங்களால் செலுத்தப்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது என்பது உறுதியாகிறது.