PDF chapter test TRY NOW

புரோடோசோவா:
புரோட்டோசோவா  வரையறுக்கப்பட்ட செல் கருவுடன் கூடிய யூகாரியோடிக்  உயிரினம் . இதன் அளவு சுமார்  \(20 - 200\) µm.
கிரேக்க மொழியில், புரோடோசோவா என்பதை, புரோடோஸ் - முதல், சோவான் - விலங்கு என்று பொருள்படுகிறது. புரோடோசோவா பற்றி படிக்கும் பாடப்பிரிவு புரோடோவிலங்கியல் எனப்படும்.
 
PPT (3).jpg
புரோட்டோசோவாக்கள்
புரோடோசோவாக்கள், வகைப்பாட்டில் புரோட்டிஸ்டா எனும் உலகின் கீழ் உள்ளன.
இவை ஒட்டுண்ணிகளாவும், தனித்தும் வாழக்கூடியவை. இனப்பெருக்கம் பொழுது பிரியும் ஒவ்வொரு பகுதியும் ஒரு முதலுயிரியாக வளரும். இவை  செல்சவ்வு ,சைடோபிளாசம் மற்றும் உட்கருவை கொண்டது .
Example:
அமீபா, யூக்ளினா, பாரமீசியம்
வகைப்பாடு:
  • சிலியேட்டா: சிலியாக்களால் இடம்பெயர்கின்றன. எ.கா. பாரமீசியம்
  • பிளாஜெல்லேட்டா: கசையிழைகளால் இடம் பெயர்கின்றன. எ.கா. யூக்ளினா
  • சூடோபோடியா: போலிக் கால்களால் இடம்பெயர்கின்றன. எ.கா. அமீபா
  • ஒட்டுண்ணி கள்: எ.கா. பிளாஸ்மோடியம்
அமீபா செல்லின் அமைப்பு:
அமீபா ஒழுங்கற்ற வடிவம் கொண்ட ஒரு செல் புரோட்டோசோவா ஆகும். இவை, போலிக்கால்கள் (pseudopodia)மூலம் இடம்பெயர்தல் மற்றும் இரையைப் பிடித்தல் போன்ற செயல்களைச்  செய்கின்றன. இரையைச் சூழ்ந்து அமீபா குமிழ் போன்று உருவாக்குகிறது. இதன் மூலம் இவை இரையை விழுங்குகின்றன.
 
PPT (2).jpg
அமீபா செல்லின் அமைப்பு
அமீபாவில் இணைவு மற்றும் ஸ்போர் உருவாதல் முறையில் இனப்பெருக்கம் நடைபெறுகிறது.
பிரியான்கள்:
512px-1e1w.jpg
பிரியான்
 
பிரியான்கள் என்பது தீடீர் மாற்றமடைந்த புரதங்கள் ஆகும். பிரியான்களில் டி.என்.ஏ. அல்லது ஆர்.என்.ஏ இருப்பதில்லை. இது விலங்குகளில் நோயை உண்டுபண்ணுகின்றது.இது அவற்றின் மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கிறது.
Example:
குயிட்ஸ்பெல்ட் ஜேக்கப் நோய்
விரியான்கள்:
இது ஒரு வைரஸ் ஆகும். இது கேப்சிட் எனவும் அழைக்கப்படும். இவை உயிருள்ள திசுக்களில் பாதிப்பை ஏற்படுத்தும். இது டி.என்.ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரத உறையையும்   கொண்டுள்ளது.
 
PPT (4).jpg
விரியான்
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/41/1e1w.jpg/512px-1e1w.jpg