PDF chapter test TRY NOW
மனித உயிரினம் தோன்றிய காலத்திலிருந்து காடுகளையும், மனிதர்களையும் தனித்தனியே பிரிக்க இயலாது. காடுகள் இல்லாத நிலை நம் வாழ்வை மிகவும் கடினமாக்கி விடும். நாம் சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜனை, மழைப்பொழிவை மற்றும் வாழ்வதற்குத் தேவையான பல அடிப்படையான பொருள்களையும் இவை தருகிறது. இப்பொழுது மனித இனம் அதிகரிப்பால் காடுகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகமெங்கும் ஆண்டுதோறும் காடுகளில் \(1.1\) கோடி ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டுமே காடுகளில் \(10\) லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் தாக்கம் காரணமாகப் பல வகையான தீய விளைவுகள் ஏற்படுகின்றன.
காடுகள் அழிவின் தீய விளைவுகள்
1. சிற்றினங்களின் அழிவு:
பல அரிய வகைத் தாவர மற்றும் விலங்கு சிற்றினங்கள் காடுகள் அழிக்கப்படுவதால் அழிந்து வருகின்றன. அதோடு, பல வகை சிற்றினங்கள் அழிந்து போகும் தருவாயில் உள்ளது. உலகில் \(80%\) சிற்றினங்கள் வெப்பமண்டல மழைக்காடுகளில் வாழ்கிறது. அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப் படி, ஒவ்வொரு நாளும் \(50\) முதல் \(100\) வகை விலங்குகள் அதன் இருப்பிடம் அழிக்கப்படுவதன் காரணமாக அழிந்து வருகின்றன.
சிற்றினங்கள்
2. மண் அரிப்பு:
மரங்கள் மண்ணை சூரிய வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. காடுகளில் உள்ள மரங்கள் அழிக்கப்படும் போது, மண்ணின் மீது சூரிய வெப்பம் நேராக விழுகிறது. இதன் விளைவாகக் கோடைக் காலத்தில் அதிகளவான வெப்பம், மண்ணில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை வெளியேறச் செய்கிறது. அதுபோன்று மண்ணிலுள்ள கரிமப்பொருள்களைச் சிதைவடையச் செய்யும் பாக்டீரியாக்களையும் பாதிப்படையச் செய்கின்றது. மேலும் மரங்களின் வேர்கள் நீரையும், ஊட்டச்சத்துக்களையும், மண்ணையும் இறுக்கிப் பிடித்துக் கொள்கிறது. எனவே, காடுகளில் மரங்கள் அழிக்கப்படுவதால் மழைக்காலங்களில் ஊட்டச்சத்துக்களுடன் இணைந்த மண் அரிக்கப்படுவதால் நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்த நிலை காடுகளில் வாழும் உயிரினங்களுக்கு பெரும் அழிவை உண்டாக்குகிறது.
மண் வறட்சி
Important!
Important!
பறவைகள் கடினமான சுற்றுச்சூழலில் ஏற்படும் தாக்கத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நெடுந்தூரம் பயணம் செய்வது இடம்பெயர்வு என்று அழைக்கப் படுகிறது. பறவைகள் மற்றும் விலங்குகள் இயற்கையின் சீரற்ற பருவ நிலையின் போது நெடுந்தூரம் பயணம் செல்கிறது.
சைபீரியாவில் காணப்படும் கடுமையான சுற்றுச்சூழலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள, சைபீரிய கிரேன் பறவைகள் குளிர்காலத்தில் அதற்கேற்ற சீரான சூழ்நிலை மற்றும் உணவுக்காக சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறது. சராசரியாக அவை \(200\ \)மைல்கள் ஒரு நாளில் பயணிக்கிறது.
சைபீரிய கிரேன்பறவைகள்