PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
காடுகளில் மரங்கள் அழிக்கப்படுவதன் விளைவாக உலகமெங்கும் பருவநிலை மிக மோசமானதாக மாறி வருவதால் பருவ மழை சரியாகப் பெய்வதில்லை. இதனால் பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் பொது மக்கள் குடிநீர் கிடைக்காமல் அதன் பாதிப்பை எதிர்கொள்கின்றன. மேலும் பல விளைநிலங்கள் தரிசாக மாறி வருகிறது. பூமியில் உயிர் வாழ உயிரினங்களுக்கு நீர் அவசியமாகும். எனவே, நாம் அனைவரும் காடுகளை வளர்ப்பதைக் கடமையாக எண்ணவேண்டும்.
காடு வளர்ப்பு என்பது மரங்கள் இல்லாத தரிசு நிலங்களில் காடுகளை உருவாக்குவது அதாவது அழிக்கப்பட்ட காட்டுப் பகுதிகளில் புதிய மரங்களை நடுவது அல்லது விதைகள் விதைப்பதை குறிப்பனவாகும் . இந்த செயல்முறை இயற்கையாக இழந்த காடுகளை உருவாக்குவதற்கும் , பெரிய அளவில் புதிய காடுகளை வளர்ப்பதற்கும்  துணைபுரிகிறது.
AfforestationinNepal.jpg
காடு வளர்ப்பு
 
  
சமூக வனவியல் பற்றிய குறிப்பு:
 
1976 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் மற்றும் தேசிய விவசாய ஆணையம் இரண்டும் இணைந்து முதன் முதலில் சமூக வனவியல் சொல்லை அமலுக்குக்  கொண்டு வந்தனர். இது சமூக மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கு உதவும் நோக்கத்துடன்  கொண்டு வரப்பட்டது.
 
தேசிய விவசாய ஆணைய அமைப்பின் நோக்கம்:
  
  • காடுகளை நிர்வகித்தல்
  • காடுகளைப் பாதுகாத்தல்
  • தரிசு நிலங்களில் காடுகளை வளர்த்தல்
  • ஏற்கெனவே இருக்கும் காடுகளோடு சேர்த்து புதிதான காடுகளை உருவாக்குவது
காடு வளர்ப்பின் முக்கியத்துவம்:
வெப்பக்காற்று, புயல், சீரற்ற பருவமழை, வெள்ளம், வறட்சி எனத் தீவிர வானிலை நிகழ்வுகளை உலகம் தொடர்ந்து சந்தித்து வருகின்றன. இதில் பல நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றங்கள் இயற்கை மனித இனத்திற்கு விடும் ஒரு எச்சரிக்கை மணியாகும். நமது பூமியைப் பாதுகாக்க மறுசீரமைப்பு தேவை அதற்குக் காடு வளர்ப்பு தான் மிகச் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
 
காடு வளர்ப்பினால் ஏற்படும் பயன்கள்:
 
இருப்பிடம் மற்றும் உணவு: காடு வளர்ப்பு உயிரினங்களின் அடிப்படைத் தேவையான இருப்பிடம் மற்றும் உணவு போன்றவை கிடைக்க வழி வகிக்கிறது.
ஆக்சிஜன் உற்பத்தி: காடுகளில் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்ப்பதன்  மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.
மழை பொழிவு: காடுகளில் மரங்களை அதிகமாக வளர்ப்பதன் மூலம் நீராவியின் அளவு அதிகரித்து மழை பொழிவை உண்டாக்குகிறது.
புவி வெப்பமடைதல்: காடுகள் மற்றும் மரங்கள் வளர்ப்பை அதிகப்படுத்தி கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை வளிமண்டலத்தில் மட்டுப்படுத்தலாம் இதனால் காற்று மாசுபாடு, பசுமை இல்ல வாயுக்கள் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றால் நிகழும் பாதிப்புகளைக் குறைக்க முடியும்.
தரிசு நிலம்: காட்டை மீண்டும் உருவாக்குவதன் மூலம் பயிர் நிலங்களைத்  தரிசாகாமல் தடுக்க முடியும்.
மண் அரிப்பு: பயிர்கள் விளையாத நிலங்களில் வேகமாகக் காற்று வீசும் போதும், அதிக மழை பொழியும் போதும் மண் அரிப்பு நிகழ்கிறது. அழிக்கப்பட்ட காடுகளில் மீண்டும் அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்ப்பதால், மரங்களின் வேர்கள் ஊட்டச்சத்துக்களுடன் சேர்ந்து மண்ணையும் இறுகப்  பிடித்துக் கொள்ளும் இதன் காரணமாக மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
உயிரினங்கள் தேவையான வளங்கள்: காடுகளில் மரங்கள் நடுவதன் மூலம் மனிதர்களுக்குத் தேவையான தீவனம், பழங்கள், விறகு மற்றும் பல வகையான வளங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
தொழிற்சாலைகளை மேம்படுத்துதல்: தொழிற்சாலைகளுக்கு சில குறிப்பிட்ட வகை மரங்கள் தேவைப்படும். அத்தகைய மரங்களை வளர்க்கக் காடு வளர்ப்பு நமக்கு உதவுகின்றது.
 
Important!
கென்யாவில் தனியொரு பெண்ணாக \(1977\) ஆம் ஆண்டில் பச்சை வளைய இயக்கம் என்ற அமைப்பை வாங்கரி மாதாய் என்பவர் நிறுவினார். இந்த இயக்கம் மூலமாக  \(51\) மில்லியனுக்கும் அதிகமான மரங்கள் கென்யாவில் நடப்பட்டுள்ளது. இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு 2004 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டது.
 
360b Shutterstock.jpg
வாங்கரி மாதாய்