PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demo காடு அழிப்பு:
- காடுகளில் உள்ள தாவரங்கள் அல்லது மரங்கள் அழிக்கப்படுவதே காடு அழிப்பு என அழைக்கப்படுகின்றது.
- காடு அழிப்பு சுற்றுச் சூழலுக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
காடு அழிப்பு
காடு மீள்வளர்ப்பு:
- காடு மீள்வளர்ப்பு என்பது காடுகளில் தாவரங்கள் அல்லது மரங்களைப் புதிதாக உருவாக்குவது அல்லது நடுவதாகும்.
- சுற்றுச்சூழலை மறுசீரமைப்பதால் இயற்கையின் மீது நேர்மறையான அதாவது நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
காடு மீள்வளர்ப்பு
காடு வளர்ப்பு:
- காடுகள் இல்லாத பகுதியில் புதிய மரங்களை நடுவதைக் குறிக்கின்றன.
- ஒரு மரத்தை உருவாக்க ஒரு மரக்கன்று நடப்படும் இல்லையெனில் விதைகள் விதைக்கப் படுகின்றன.
- காடு வளர்ப்பின் முக்கிய நோக்கம் அதிக அளவு நிலப்பரப்பைக் காடாக மாற்றுவதாகும்.
காடு வளர்ப்பு
காடு மீள்வளர்ப்பு:
- காடுகள் அழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்கள் வளர்க்கப்படுவதைக் குறிக்கின்றன.
- அழிக்கப்பட்ட ஒரு மரத்திற்கு இணையாகப் பல மரக்கன்றுகள் நட வேண்டும்.
- காடு மீள் வளர்ப்பின் முக்கிய நோக்கம் காடுகளை அழிப்பதைத் தடுப்பதேயாகும்.