
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoகாடு அழிப்பு என்றால் என்ன? காடு அழிப்பிற்கான காரணங்கள் மற்றும் அவற்றின் விளைவுகளை விளக்குக.
காடு அழிப்பு என்பது இரண்டு வகையில் அழிவுகள் நிகழலாம். அவை அல்லது மனிதச் செயல்பாடுகள் மூலமாக ஏற்படலாம்.
காடு அழிப்பிற்கான காரணங்கள்:
1. இயற்கைக் காரணங்கள்:
- வெள்ளம் அல்லது புயல்கள்
2. மனிதச் செயல்பாடுகள் மூலம் ஏற்படும் காரணங்கள்:
- கால்நடை வளர்ப்பு
- சட்டவிரோதமாக மரங்களை வெட்டுதல்
- சுரங்கப் பணி
- எண்ணெய் எடுத்தல்
- அணை கட்டுதல்
- கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துதல்
காடு அழிப்பு விளைவுகள்:
இனங்கள் அழிவு: காடு அழிப்பு பல அற்புதமான தாவரங்கள் மற்றும் விலங்குகளை இழக்க நேரிடுகிறது மற்றும் பல அழிவின் விளிம்பில் உள்ளன.
மண்ணரிப்பு: மரங்கள் வெட்டப்படும் போது, மண் அரிக்கப்பட்டு ஊட்டச்சத்துகள் நீக்கப்படும்.
: மரங்களை வெட்டும்போது வெளியாகும் நீராவியின் அளவு குறைகிறது. எனவே மழைப் பொழிவு குறைகிறது.
வெள்ளம்: மரங்கள் வெட்டப்படும்போது, நீரின் ஓட்டம் சீர் குலைந்து சில பகுதிகளில் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது.
புவிவெப்பமயமாதல்: காடு அழிப்பு மரங்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. எனவே கார்பன் டை ஆக்சைடு அளவு வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது. கார்பன் டை ஆக்சைடானது நீராவி, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவற்றுடன் பசுமை இல்ல வாயுக்களை உருவாக்குகிறது. இந்த வாயுக்கள் புவி வெப்பமடைதலுக்கு காரணமாகிறது.
வீட்டு நிலத்தை அழித்தல்: காடுகளை அழிப்பது பழங்குடியினரின் வாழ்க்கை முறையை பாதிக்கிறது.