PDF chapter test TRY NOW

பொருள்கள் ஏன் நீரின் மேற்பரப்பில் மூழ்குகின்றன அல்லது மிதக்கின்றன?
 
மேலே உள்ள கேள்விக்கான தீர்வைப் புரிந்துகொள்ள ஒரு செயல்பாட்டைச் செய்வோம்.
  • ஒரு சாதாரண வெளிப்படையான கண்ணாடிக் குடுவையை தண்ணீருடன் எடுததுக் கொள்ளுங்கள்.
  • நீரின் மேற்பரப்பில் ஒரு இரும்பு ஆணி மற்றும் மரக்கட்டையை வைக்கவும்.
  • என்ன நடக்கிறது என்பதைக் கவனியுங்கள்.
3.png
இரும்பு ஆணி மற்றும் மரக்கட்டை உள்ள குடுவை
ஒரு பொருளானது கொடுக்கப்பட்ட திரவத்தில் மூழ்குவதோ அல்லது மிதப்பதோ, குறிப்பிட்ட அந்த திரவத்தின் அடர்த்தியோடு அப்பொருளின் அடர்த்தியை ஒப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.
  • திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி குறைவாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மிதக்கும்.
  • திரவத்தின் அடர்த்தியை விட பொருளின் அடர்த்தி அதிகமாக இருப்பின், அப்பொருளானது அத்திரவத்தில் மூழ்கும்.
இங்கே,
  • நீரை விட அடர்த்தி குறைவான மரக்கட்டை நீரில் மிதக்கும்.
  • நீரை விட அதிக அடர்த்தி கொண்ட பொருளான இரும்பு ஆணி நீரில் மூழ்கும்.