PDF chapter test TRY NOW

நாம் ஏற்கனவே அடர்த்தி பற்றி விவாதித்தோம்.
ஒரு பொருளின் அடர்த்தியை அதன் ஓரலகு பருமனுக்கான நிறை என்று குறிப்பிடலாம்.
இது கணித ரீதியாக பின்வருமாறு குறிப்பிடப்படுகிறது,
 
அடர்த்தி=நிறைபருமன்
 
அடர்த்தியின் \(SI\) அலகு கிகிமீ்3
 
இரண்டு பொருள்களின் அடர்த்தியை ஒப்பிடுவதற்கு அவற்றின் நிறைகளைக் கண்டறிய வேண்டும். பெரும்பாலும் \(4\ °C\) வெப்பநிலையில் நீரின் அடர்த்தியுடன் பொருள்களின் அடர்த்தியை ஒப்பிடுவதுதான் வழக்கமாக உள்ளது. ஏனெனில், \(4\ °C\) வெப்பநிலையில் நீரின் அடர்த்தி \(1\) கிசெமீ3 ஆகும்.
 
ஒரு பொருளின் ஒப்படர்த்தி என்பது அப்பொருளின் அடர்த்தியை \(4\ °C\) ல் நீரின் அடர்த்தியோடு ஒப்பிடுவதாகும்.
 
எனவே, ஒரு பொருளின் ஒப்படர்த்தி என்பது அப்பொருளின் அடர்த்திக்கும், \(4\ °C\) வெப்பநிலையில் நீரின் அடர்த்திக்கும் உள்ள விகிதமென்று வரையறுக்கப்படுகிறது.
 
ஒப்படர்த்தி R.D.=பொருளின் அடர்த்திநீரின் அடர்த்தி (4°C)அடர்த்தி=நிறைபருமன்அதனால்,ஒப்படர்த்தி R.D.=பொருளின்நிறைபொருளின்பருமன்நீரின்நிறைநீரின்பருமன்ஆனால், பொருளின் பருமனும் நீரின் பருமனும்சமமாக உள்ளதால்,ஒப்படர்த்தி=பொருளின் நிறைநீரின் நிறை (4°C)
 
எனவே,
ஒரு பொருளின் ஒப்படர்த்தியானது குறிப்பிட்ட பருமன் அளவுள்ள அப்பொருளின் நிறைக்கும், \(4\ °C\) வெப்பநிலையில் அதே பருமனைக் கொண்ட நீரின் நிறைக்கும் இடையே உள்ள விகிதத்தையும் குறிக்கிறது.
ஒப்படர்த்திக்கு அலகு இல்லை.
 
ஒப்படர்த்தியை அளவிடுதல்:
 
பிக்நோமீட்டர் (Pycnometer) என்ற உபகரணத்தைக் கொண்டு ஒப்படர்த்தியை அளவிட முடியும். பிக்நோமீட்டர் என்பதற்கு அடர்த்திக் குடுவை (density bottle) என்ற இன்னுமொரு பெயரும் உண்டு.

இக்குடுவையானது மெல்லிய துளையிடப்பட்ட அடைப்பானைக் கொண்டுள்ளது.
 
இக்குடுவையை திரவத்தினால் நிரப்பி இந்த அடைப்பானால் மூடினால் குடுவையில் உள்ள அதிகப்படியான திரவம் இதில் உள்ள துளையின் வழியே வெளியேறிவிடும்.
 
வெப்பநிலை மாறாமல் இருக்கும்பட்சத்தில், இக்குடுவை எப்போதும் ஒரே அளவு பருமனைக் கொண்ட திரவத்தை அதனுள் கொண்டிருக்கும் (அது எந்தத் திரவமாக இருந்தாலும்).
 
3.jpg
பிக்நோமீட்டர்
 
எனவே,
கொடுக்கப்பட்ட பொருளின் அடர்த்திக்கும் அதே அளவு பருமனுள்ள ஒப்பிடப்படும் பொருளின் அடர்த்திக்கும் இடையே உள்ள விகிதம் ஒப்படர்த்தியைக் குறிக்கிறது.
 
ஒப்பிடப்படும் பொருள் நீர் எனில் ஒப்படர்த்திக்குப் பதிலாக தன்னடர்த்தி (specific gravity) என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.