
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்அடர்த்தியின் கருத்தைப் புரிந்து கொள்ள ஒரு எளிய செயல்பாட்டைச் செய்வோம்..
- ஒரே மாதிரியான இரண்டு குடுவைகளைத் தேர்ந்தெடுக்கவும்.
- ஒரு குடுவையில் \(250\) அளவு நீரையும் மற்றொன்றில் அதே அளவு மண்ணெண்ணையையும் நிரப்பவும்.
- இரு குடுவைகளின் எடையை தராசில் அளந்து, மதிப்புகளைக் குறித்துக்கொள்ளவும்.


மண்ணெண்ணெய் குடுவை மற்றும் நீர் குடுவை
நீரினால் நிரப்பப்பட்ட குடுவையின் எடை அதிகமாக உள்ளதைக் காணலாம்.
ஏன்?
நீர் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் ஓரலகு பருமனுக்கான நிறையைக் கண்டறிந்தால் இதற்கான விடையை அறியலாம்.
இதை மேலும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு குடுவையின் நிறையை \(80\) கி எனக் கொள்வோம்.
நீர் நிரப்பப்பட்ட குடுவையின் நிறை \(330\) கி மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட குடுவையின் நிறை \(280\) கி இருக்குமெனில், நீரின் நிறை மட்டும் \(250\) கி மற்றும் மண்ணெண்ணையின் நிறை மட்டும் \(200\) கி ஆகும்.
இதேபோல்,
இதன் முடிவு, நீரின் அடர்த்தி மற்றும் மண்ணெண்ணையின் அடர்த்தி முறையே \(1\) மற்றும் \(0.8\) என்பதாகும்.
எனவே,
ஒரு பொருளின் அடர்த்தியை அதன் ஓரலகு பருமனுக்கான நிறை என்று குறிப்பிடலாம்.
அடர்த்தியின் \(SI\) அலகு அல்லது . மேலும் எனவும் இதனைக் குறிப்பிடலாம்.
அடர்த்திக்கான குறியீடு ரோ (\(\rho\)) எனப்படுகிறது.