PDF chapter test TRY NOW

நீண்ட அல்லது சுருண்ட குழல் போன்ற அமைப்பைக் கொண்ட சிறுகுடல் இரைப்பையின் கீழ் முனையில் தொடங்குகிறது. இது உணவுக் கால்வாயில் மிகவும் நீளமான பகுதி சுமார்  \(5\) - \(7\) மீட்டர் நீளமுள்ளது. சிறுகுடல் பெருங்குடலில் முடிகிறது.
YCIND_221202_4782_intestines organ anatomy.png
சிறுகுடல் மற்றும் பெருங்குடல்
 
சிறுகுடல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது, அவை:
  1. முன்சிறு குடல் (டியோடினம்)
  2. நடுச்சிறுகுடல் (ஜுஜினம்)
  3. பின்சிறுகுடல் (இலியம்) 
1. முன்சிறுகுடல் (டியோடினம்):
இது தொப்புளுக்கு மேல் பகுதியில் பின் முதுகைச் சார்ந்துள்ளது. முன்சிறுகுடல் 25 செ.மீ. நீளமுள்ளது.
இது ‘C’ வடிவத்தில் உள்ளது. இதில் தான் கணையமும் (பித்த நாளம்) கல்லீரலும் (கணைய நாளம்) தொடர்ந்து டியோடினத்தில் திறக்கிறது.
 
2. நடுசிறுகுடல் (ஜெஜுனம்):
சிறுகுடலின் நடுப்பகுதி (ஜெஜுனம்) என அழைக்கப்படும். இப்பகுதி சிறிய பகுதி சுமார் ஒன்றரை மீட்டர் நீளமுள்ளது.
சிறுகுடல் நீர் என்பது சிறுகுடலில் சுரக்கும் ஒரு திரவம் ஆகும். நொதிகளான சுக்ரேஸ், மால்டேஸ், லாக்டேஸ் மற்றும் லிப்பேஸ் போன்றவை சிறுகுடல் நீரில் காணப்படுகிறது.
 
3. பின்சிறுகுடல் (இலியம்):
சிறுகுடலின் அடிப்பகுதி பின்சிறுகுடல் (இலியம்) என அழைக்கப்படும். இப்பகுதி அதிக நீளமான பகுதி இரண்டரை மீட்டர் நீளமுள்ளது.
இலியம் பகுதியின் தொடர்ச்சி பெருங்குடலில் திறக்கிறது. இப்பகுதியில் மிகச் சிறிய விரல் போன்ற அமைப்புடைய நீட்சிகள் என்பது குடல் உறிஞ்சிகள் ஆகும். இதில் ஏறக்குறைய நான்கு மில்லியன் குடலுறிஞ்சிகள் காணப்படுகிறது. அவை ஒவ்வொன்றும் 1 மி.மீட்டர் நீளமுடையது. உணவுச்சத்துகள் இங்கு தான் உறிஞ்சப்பட்டு இரத்தத்துக்கு அனுப்புகிறது. மேலும் மெல்லிய இரத்தக் குழாய்கள், நிணநீர் கொண்ட குடற்பால் குழல்கள் போன்றவை சிறுகுடலின் உட்பகுதியில் காணப்படுகிறது.
 
சிறுகுடலானது இரண்டு செயல்களைச் செய்கிறது, அவை:
  1. செரிமானம்
  2. உறிஞ்சுதல்
குடற்சாறு, கணையநீர், பித்தநீர் ஆகியவை செரிமான நீர்கள் எனப்படும்.
  • முன்சிறுகுடலில் (டியோடினம்) இரு செரிமான சுரப்பிச் சாறுகளான கல்லீரலிலிருந்து பித்த நீரையும், கணையத்திலிருந்து கணைய நீரையும் பெறுகிறது.
  • குடல் சுரப்பிகள் குடல்சாறுகளைச் சுரக்கிறது.
Important!
சிறுகுடல் ஒரு செரிமான மைதானம் ஆகும். இது செரிமான மண்டலத்தில் மிக நீளமான பகுதி  சுமார் 5 மீ நீளமுடையது. ஆனால் ‘’ எழுத்தைப் போல் பெருங்குடல் இருக்கிறது. இது ஒரு கோட்டைச் சுவர் போல் அமைந்து சிறுகுடலைப் பாதுகாக்கிறது. தடித்த குழாயான பெருங்குடல் 1.5 மீ நீளமுடையது.