PDF chapter test TRY NOW

கணையம் என்பது உடலின் உட்புறத்திலுள்ள மிகப்பெரிய கலப்படச்சுரப்பி ஆகும். இவை கேரட், முள்ளங்கி வடிவத்தில் ஊதாவும், மஞ்சளும் கலந்த ஓர் நிறத்தில் தட்டையான உறுப்பாகும். இது சுமார்  \(20 - 25\) செ.மீ நீளம் உள்ளது. மேலும் இது பிளவுபட்ட இலை அமைப்பு கொண்டவை.
கணையம் இருக்கும் இடம்:
 
இவை வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கும் முன்சிறுகுடலுக்கும் (டியோடினம்) இடையே காணப்படும்.
 
shutterstock_1396704593.jpg
கணையம்
 
கணையத்தின் பணிகள்:
 
i. இரண்டு சுரப்பிகளாகக் கணையம் தன் பணிகளைச் செய்கிறது.
  • நாளமுள்ள சுரப்பி
  • நாளமில்லா சுரப்பி
ii. கணையம் நாளமுள்ள சுரப்பியாகச் செயல்படும் பகுதியில் கணைய நீரைச் சுரக்கிறது. அதில் மூன்று நொதிகள் உள்ளது. அவை:
  • லிப்பேஸ்
  • டிரிப்சின் 
  • அமைலேஸ்
கணைய நாளம் வழியாக டிரிப்ரின் (Tryspin), ஹைமோடிரிப்சின் (Chymotrypsin) இரண்டும் உணவில் உள்ள புரதத்தை உடைத்து பெப்டைடுகளாக (Peptides) மாற்றுகிறது. அமைலேஸ் (Amylase) உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளை குளுக்கோஸாக (Glucose) மாற்றுகிறது. லிப்பேஸ் (Lipase) உணவில் உள்ள கொழுப்பை கொழுப்பமிலமாக மாற்றுகிறது. இவை அனைத்தும் குடலினால் உறிஞ்சப்பட்டு நேரடியாக இரத்தத்தில் கலக்கிறது.
 
iii. கணையத்தின் மேற்புறத்தில் ‘லாங்கர்ஹான் திட்டுகள்’ (Islets of Langerhans) எனும் சிறப்புத் திசுக்கள் ஆங்காங்கே பரவிக் கிடக்கின்றன. ஆரோக்கியமாக உள்ள ஒரு நபரிடம் \(10\) இலட்சம் திட்டுக்களும் ஒவ்வொரு திட்டிலும் \(3000\) முதல் \(4000\) வரை நாளமில்லா செல்கள் உள்ளன. இந்த செல்கள் ஆல்பா, பீட்டா, டெல்டா என்ற மூன்று வகையான ஹார்மோன்களை சுரக்கிறது. இவற்றில் பீட்டா  செல்கள் இன்சுலினையும் (Insulin), ஆல்பா செல்கள் குளுக்கோகானையும் (Glucagon), டெல்டா செல்கள் (Somatostatin) ஹார்மோனையும் சுரக்கின்றன.
 
iv. குடல் சுரப்பிகள் சக்கஸ் எண்ட்டிரிகஸ் என்ற சாறினைச் சுரக்கிறது. காரத்தன்மையுடைய பகுதிகளில் செயல்படும் நொதிகளான மால்டேஸ், லாக்டேஸ், சுக்ரேஸ் மற்றும் லிப்பேஸ் போன்றவை இவற்றிலுள்ளன. செரிக்கப்பட்ட உணவானது முன் சிறுகுடலிலிருந்து மெல்லக் கீழ்நோக்கி நகர்ந்து பின்சிறுகுடலை அடைகிறது. அங்கே உணவின் சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது.
 
1. உணவு உறிஞ்சப்படுதல்:
 
குடலுறிஞ்சிகள் மூலம் உணவு செரிமானம் அடைந்த பின்னர் பெறப்பட்ட ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுதலே உறிஞ்சுதல் என அழைக்கப்படும். அதோடு உறிஞ்சப்பட்டச் சத்துகள் உடல் முழுவதும் இரத்தம் மற்றும் நிணநீர் மூலமாக  எடுத்து செல்லப் படுகிறது. ஒவ்வொரு வகை உடல் செல்களின் தேவைகளுக்கேற்ப ஊட்டச்சத்துகள் வழங்கப்படுகிறது.
 
2. உணவு தன்மயமாதல்:
 
உறிஞ்சப்பட்ட உணவுப் பொருட்களை உட்பகுதியிலுள்ள மற்றும் ஒரே மாதிரி திசுக்களோடு கொண்டு சேர்ப்பதே தன்மயமாதல் எனப்படும். கொழுப்பு செரிமானம் ஆவது மூலம் கொழுப்பு அமிலங்கள் மற்றும் கிளிசரால் உருவாகி அவை மீண்டும் இங்கு கொழுப்புகளாக மாற்றப்படும்.
 
கொழுப்புத்திசுக்களில் அதிகப்படியாக உள்ள கொழுப்புகள் அடுக்கு அடுக்காக சேர்த்து வைக்கப்படுகிறது. அதிகளவிலுள்ள சர்க்கரை இரத்தத்தில் காணப்படும் போது அதனை கல்லீரலில் சிக்கலான கூட்டுச் சர்க்கரை (பாலிசாக்ரைடு) மற்றும் கிளைக்கோஜனாக ஆக சேமித்து வைக்கிறது. உடலுக்குத் தேவையான பல்வேறு புரதங்களைத் தொகுக்க அமினோ அமிலங்கள் பயன்படுத்தப்படுகிறது.