PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
மாறுதிசை மின்னோட்டத்தின் நன்மைகள்:
  • மாறுதிசை மின்னோட்டத்தின் மின்னழுத்த மதிப்பை மின்மாற்றியை பயன்ப்படுத்தி எளிதில் மாற்றிக் கொள்ள முடியும்.
  • அதிக தொலைவுகளுக்கு மாறுதிசை மின்னோட்டத்தை அனுப்ப வேண்டும் எனில், முதலில் ஏற்று மின்மாற்றிகளைக் கொண்டு மின்னழுத்தத்தை உயர்த்திய பின் அனுப்பும் போது ஆற்றல் இழப்பு வெகுவாகக் குறைகிறது.
  • நேர் திசை மின்னோட்டத்தை நீண்ட தொலைவுக்கு அனுப்ப முடியாது. மாறுதிசை மின்னோட்டத்தை எளிதில் நேர்திசை மின்னோட்டமாக மாற்ற முடியும்.
  • நேர் திசை மின்னோட்டத்தை உருவாக்குவதை விட மாறுதிசை மின்னோட்டத்தை உருவாக்குதல் எளிது ஆகும்.
  • நமக்கு பல வகையில் பயன்படும் மின்காந்தத் தூண்டலை மாறுதிசை மின்னோட்டத்தினால் உருவாக்க நம்மால் உருவாக்க முடியும்.
நேர்திசை மின்னோட்டத்தின் நன்மைகள்:
  •  மின்முலாம் பூசுதல், மின் தூய்மையாக்குதல், மின்னச்சு வார்த்தல் ஆகியவற்றை நேர் திசை மின்னோட்டத்தைக் கொண்டு மட்டுமே செய்ய இயலும்.
  • நேர் மின்னூட்ட வடிவில் மட்டுமே மின்சாரத்தை சேமிக்க இயலும்.