PDF chapter test TRY NOW
மின்சாரத்தினால் விளையும் சில ஆபத்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவைகள் முறையே,

மின்அதிர்ச்சி ஏற்படுதல்
வெற்றுக்கம்பியைத் தொடக் கூடாது. பாதுகாப்புக் கையுறைகளை அணிந்து கொண்டோ மின் காப்புடைய முக்காலியில் நின்றுகொண்டோ அல்லது இரப்பர் காலணிகளை அணிந்து கொண்டோ தான் மின்சாரத்தைக் கையாள வேண்டும்.

மின் சாதனங்கள்
ஒரே மின் பொருத்துவாயில் பல மின் சாதனங்களைப் பொருத்தாதீர்கள்.

பாதுகாப்பு உறை
மின் சாதனங்களை அவற்றின் வரையளவுக்குத் தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும்.
உதாரணம்: காற்றுப்பதனி பொருத்தும் புள்ளி, தொலைக்காட்சிப் பெட்டி பொருத்தும் புள்ளி, மைக்ரோஅலைஅடுப்பு பொருத்தும் புள்ளி உள்ளிட்டவை ஆகும்.

ஈரமான சூழல்
மின்சாரம் உள்ள இடங்களை நீரோ அல்லது ஈரப்பதமோ இல்லாமல் உலர்ந்துள்ளவாறு வைத்துக் கொள்ளவும். ஏனெனில் அது மின்கசிவிற்கு வழிவகுக்கும்.

குழந்தையின் பாதுகாப்பு
மின்சாரத்தினால் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படா வண்ணம் மின் பொருத்துவாய்களை வைக்க வேண்டும்.
Important!
உலர்ந்த நிலையில் மனித உடலின் மின்தடை ஏறக்குறைய \(1,00,000\) ஓம் ஆகும் . நம் உடலில் தண்ணீர் இருப்பதால், மின் தடையின் மதிப்பு சில நூறு ஓம் ஆகக் குறைந்து விடுகிறது. எனவே, ஒரு மனித உடல் இயல்பிலேயே மின்னோட்டத்தைக் கடத்தும் நற்கடத்தியாக உள்ளது. ஆகவே, மின்சாரத்தைக் கையாளும் போது நாம் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்க வேண்டும்.