PDF chapter test TRY NOW

மின் சுற்று இணைப்புகளை  இரண்டு வகையாக  பிரிக்கலாம். அவைகள் முறையே,
  • தொடர் இணைப்பு,
  • பக்க இணைப்பு.
தொடர் இணைப்பு:
 
YCIND_220601_3707_3.png
தொடர் இணைப்பு மின்சுற்று
  • தொடர் இணைப்பில் ஒவ்வொரு கருவியும் அல்லது மின்தடையும் ஒன்றையடுத்து ஒன்றாக ஒரே சங்கிலிப் போன்று இணைக்கப்பட்டு இருக்கும்.
  • தொடரிணைப்பில் மின்னூட்டம் பாய்வதற்கு ஒரு பாதை மட்டுமே இருக்கும்.
  • தொடரிணைப்பில் செல்லும் மின்னோட்டம் (\(I\)) எப்பொழுது மாறாமல் இருக்கும்.
  • தொடரிணைப்பிலுள்ள மின்சுற்றில் அனைத்துப் புள்ளிகளிலும் சமமான மின்னோட்டம் மட்டுமே பாயும்.
YCIND_221003_4516_scheme_6.png
தொடர்இணைப்பு சுற்று
  • மின்தடைகள் தொடரிணைப்பில் உள்ள போது ஒவ்வொரு மின்தடை வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் பாயும், அவற்றிற்கிடையே மின்னழுத்தம் வெவ்வேறாக இருக்கும்.