PDF chapter test TRY NOW

உலோகக் கலவை:
  
கி.மு. \(3500\) ல் மக்கள் வெண்கலம் என்ற ஒரு உலோகக் கலவையை பயன்படுத்தினர்கள். எனவே, உலோகக் கலவையை உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது ஏற்கனவே நம் வழக்கத்தில் இருந்த ஒன்று தான். இன்று நாம் பயன்படுத்தும் பல்வேறு உலோகப் பொருள்கள் உலோகக் கலவைகளாகும். உலோகக் கலவை என்பது ஒன்றிற்கு மேற்பட்ட உலோகங்களின் கலவையாகும்.
 
evolution-g1353c3c63_1920.jpg
பண்டைய உலோக கலவை சிலைகள்
 
உலோகங்கள் உருக்கப்பட்டு, நன்கு கலக்கப்பட்டு உலோகக் கலவைகள் உருவாக்கப் படுகின்றன. மிக அரிதாகவே அலோகங்கள் உலோகங்களுடன் கலக்கப்பட்டு உலோகக்கலவைகள் உருவாக்கப்படுகின்றன.
 
shutterstock153779087.jpg
உலோகக் கலவை உருக்குதல்
 
பொதுவாக உலோகக் கலவைகள் அவை உருவாக்கப்பட்ட உலோகங்களை விட அதிக பயனுள்ளதாக இருக்கின்றன. பித்தளையானது செம்பு மற்றும் துத்தநாகக் கலவை ஆகும்.