PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoஉலோகங்கள்:
உலோகங்கள் பொதுவாக கடினமான, பிரகாசமான, கம்பியாக நீட்டக் கூடிய, தகடாக அடிக்கக்கூடிய, உருகக்கூடிய மற்றும் வெப்பத்தையும் மின்சாரத்தையும் கடத்தக் கூடிய தன்மை கொண்டவை. பாதரசத்தைத் தவிர மற்ற எல்லா உலோகங்களும் அறை வெப்ப நிலையில் திண்மமாகவே இருக்கும். இவை தனிம வரிசை அட்டவணையில் பெரிய (அதிக) அளவில் இடத்தைக் பெற்றுள்ளன. இவை கீழ்க்கண்டவாறு பல்வேறு வகைப்படுத்தப்படுகின்றன.
உலோகங்கள்
அ. கார உலோகங்கள். எ.கா.: லித்தியம் முதல் ப்ரான்சியம் வரை.
ஆ. கார மண் உலோகங்கள். எ.கா.: பெரலியம் முதல் ரேடியம் வரை.
இ. இடைநிலை உலோகங்கள். எ.கா.: தொகுதி \(3\) முதல் \(12\) வரை.
ஈ. p தொகுதி தனிமங்கள். எ.கா.: Al, Ga, In, Tl, Sn, Pb மற்றும் Bi.
அலோகங்கள்:
அலோகமானது பளபளப்பற்ற, மென்மையான, கம்பியாக நீட்ட முடியாத, தகடாக அடிக்க முடியாத, மின்சாரத்தைக் கடத்தாத தன்மை கொண்டவை. வேறுவிதமாகக் கூறினால், உலோகப் பண்பு இல்லாத தனிமங்கள் அனைத்தும் அலோகங்களாகும். இவை \(p\) தொகுதியில் மட்டுமே இடம்பெறுகின்றன.
அலோகங்கள்
எ.கா.: \(p\)-தொகுதி அலோகங்கள்: கார்பன் (C), நைட்ரஜன் (N), ஆக்ஸிஜன் (O), பாஸ்பரஸ் (P), சல்பர் (S), செலினியம் (Se), ஹலஜன்கள் (F, Cl, Br மற்றும் I) மற்றும் மந்த வாயுக்கள் (He - Rn) போன்றவை.
உலோகப் போலிகள்:
உலோகம் மற்றும் அலோகம் ஆகிய இரண்டின் பண்புகளைக் கொண்டவை உலோகப் போலிகளாகும். எ.கா.: போரான், ஆர்செனிக்.