PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
வைட்டமின் வகைகளில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் குறித்துப் பின்வருமாறு காணலாம்.
 
வைட்டமின் A (ரெட்டினால்):
 
இவ்வகை  வைட்டமின் கண்களுக்கும், கண் பார்வைக்கும் மிகவும் அவசியமானதொன்றாகும். அதோடு செல் வளர்ச்சி, தோல் பளபளப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி போன்றவற்றிற்கும் வைட்டமின் \(A\) உதவுகின்றது.
 
வைட்டமின் A நிறைந்த உணவுகள்:
 
கேரட், பப்பாளி, முட்டை, இலை வகை காய்கறிகள், பால், நெய், சோளம், மஞ்சள் நிற பழங்கள், கீரைகள், முட்டையின் உட்கரு மற்றும் மீன் கல்லீரல் எண்ணைய்.
 
shutterstock558453145w400.jpg
வைட்டமின் A உணவு மூலங்கள்
 
குறைபாட்டு நோய்கள் மற்றும் பிரச்சனைகள் :
  • மாலைக்கண் நோய் அல்லது  நிக்டலோபியா
  • கண் பார்வை மங்குதல்
  • குறைந்த வெளிச்சத்தில் பார்க்கச் சிரமப்படுதல்
  • சீரோப்தால்மியா அல்லது தோல் நோய்கள்
3w1175.png
மாலைக்கண் நோய்
 
அறிகுறிகள்:
  • கண்களில் கார்னியா உலர்ந்து போய் இருக்கும்
  • இரவில் பார்க்க முடியாது
  • தோல் செதில் போன்று வறண்டு இருக்கும்
வைட்டமின் D (கால்சிஃபெரால்):
 
வைட்டமின் D உடலில் உள்ள எலும்புகளை வலிமையாக்க மிகவும் அவசியம். உணவு மூலம் உட்கொள்ளப்படும் சுண்ணாம்புச் சத்தினை உறிஞ்சி உடலில் சேமிக்கவும் இந்த வைட்டமின் தேவைப்படுகிறது. மேலும் இது சூரிய ஒளியில் அதிகம் உள்ளது. குறிப்பாக அதிகாலை நேரச் சூரிய ஒளியில் மிக அதிகமாக இந்த வைட்டமின் உள்ளது. எனவே, அதிகாலை நேரங்களில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை செய்வதன் மூலம் நம் தோல் சூரிய ஒளியிலிருந்து இந்த வைட்டமினை உறிஞ்சி நமக்கு நன்மை அளிக்கிறது.
 
வைட்டமின் D நிறைந்த உணவுகள்:
 
மீன் எண்ணைய், பால், முட்டை, கல்லீரல்.
 
shutterstock1131287756w400.jpg
வைட்டமின் D உணவு மூலங்கள்
 
Important!
சூரிய கதிர் வீச்சிலிருந்து நம்மைக் காக்க நாம் பயன்படுத்தும் களிம்புகள் (Sunscreen lotion) வைட்டமின் \(D\) உற்பத்தியை \(95%\) குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
குறைபாட்டு நோய்கள்
  • ரிக்கெட்ஸ் (இவை பொதுவாகக் குழந்தைகளிடம் காணப்படும் நோய் ஆகும்)
Bonesricketsw400.png
ரிக்கெட்ஸ்
 
அறிகுறிகள்:
  • எலும்புகள் பலவீனம் அடைந்து எளிதில் வளைதல்.
  • கவட்டை கால்கள்
  • குறைபாடு உள்ள மார்பு எலும்புகள்
  • புறா போன்ற மார்பு வளர்ச்சி