PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
4. குளிர் முறையில் பாதுகாத்தல்
விரைவில் கெட்டுப் போகக்கூடிய, அழுகக்கூடிய உணவு பொருட்களைக் குறைந்த வெப்ப நிலையில் அல்லது குளிர்ந்த நிலையில் வைத்து அதன் உபயோக நாட்களை அதிகரித்தல் குளிர் முறை பாதுகாத்தல் எனப்படும்.
  • காய்கறிகள் மற்றும் பழங்கள்
  • காய்கறிகள் மற்றும் பழங்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள்
  • பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள்
ஆகியவை, சில எடுத்துக்காட்டு உணவுகள் ஆகும். 
 
இந்த முறையில் பாதுகாப்பதன் மூலம் உணவில் ஏற்படும் உயிர்வினைகள் மற்றும் வேதியியல் வினைகள் மாற்றங்கள் குறைக்கப்படும். எனவே, உணவின் தரம் நீண்ட நாள் நீடிக்கும் மற்றும் உணவு கெட்டுப்போவது தாமதப்படுத்தப்படும்.
 
ChebanenkoAnnShutterstockw300.jpg
குளிர் முறை பாதுகாத்தல்
  
Important!
வாழைப்பழம் அறை வெப்பநிலையில் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆனால் குளிர்சாதனப்  பெட்டியில் வைப்பதால் தோல் மஞ்சள் நிறத்தில் இருந்து இருண்ட மஞ்சள் நிறத்திற்கு மாறும். அந்த பழுப்பு நிற மாற்றத்தின் காரணம், பழத்தில் உள்ள செல்கள் அழிந்து நொதிகள் செயல்படுவதே ஆகும்.
5. உறைய வைத்தல்
உணவினை பாதுகாக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் முறை இது ஆகும். இந்த முறையில் உணவானது \(0\) °C  வெப்பநிலைக்கும் கீழே சேமித்து வைக்கப்படுகின்றது. இது போன்ற சூழ்நிலையில் நுண்ணுயிரியால் வளர முடியாது. அந்த காரணத்தினால் வேதி வினைகள் நடப்பது குறையும்.
 
மேலும், வளர்சிதை மாற்ற வினைகள் நடப்பது தாமதப்படுத்தப்படும். எனவே, உணவானது நல்ல நிலையில் பல நாட்கள் வைக்கப்படும்.
 
shutterstock731255815w300.jpg
உறைய வைக்கப்பட்ட உணவு
6. பாஸ்டர் பதனம் (பாஸ்ட்டுரைசேஷன்)
பாஸ்ட்டுரைசேஷன் முறை குறிப்பாக திரவ நிலை உணவுகளைப் பதப்படுத்த பயன்படுகின்றது.
இந்த முறையில், பால் போன்றத் திரவ நிலை உணவானது வெப்பத்திற்கு உட்படுத்தப்பட்டு அதன் மூலம் பதப்படுத்தப்படும். குறிப்பாக பால் \(30\) நிமிடங்களுக்கு \(63\)°C வெப்பநிலையில் கொதிக்க வைக்கப்படும். பின்னர் உடனே குளிரூட்டப்படும். இந்த செயல்முறையில் பாலில் உள்ள நுண்ணுயிரிகள் முற்றிலுமாக அழிக்கப்படுகின்றன.
 
shutterstock_1793163517.png
பாஸ்ட்டுரைசேஷன் முறை
7. கலங்களில் அடைத்தல்
பழங்கள், காய்கள், இறைச்சி, பால் சார்ந்த பொருட்கள், பழரசம், மேலும் சில பழரசம் போன்ற உடனடியாக உண்ணும் சில பொருட்கள் கலன்களில் அடைத்து பதப்படுத்தப்படுகின்றன. உணவானது கலன்களில் நிரப்பப்பட்டு பின்னர் அதிக அளவில் அழுத்தம் கொடுக்கப்படும். பின்னர் தூய்மையான நீராவி கலன்களில் உள்ளே வெளிக்காற்று புகாதவாறு அடைக்கப்படும். அடைத்த பின்னர் அவை அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தப்படும். இந்த தொடர் செயல்முறையில் உணவில் உள்ள நுண்ணுயிரிகள் முற்றிலுமாக அழிக்கப்படும்.
 
shutterstock1012197685w300.jpg
கலன்களில் அடைக்கப்பட்ட உணவு