PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
உணவினை பாதுகாக்க பல இயற்கை மற்றும் செயற்கையான பொருட்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி நாம் உணவின் தன்மைத் கெடாமல் பாதுகாக்க இயலும்.
 
இயற்கை உணவுப் பாதுகாப்பு பொருள்கள்
 
நமக்கு இயற்கையாக கிடைக்கும் உப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை நாம் உணவினைப் பாதுகாக்கும் பொருட்களாக பயன்படுத்த முடியும்.
 
உப்பு
 
உணவினைப் பாதுகாக்க பழங்காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும் ஒரு பொருள் உப்பு ஆகும்.
 
உணவில் உப்பு சேர்க்கப்படும்போது உணவின் ஈரப்பதம் நீக்கப்பட்டு உணவு பாதுகாக்கப்படும். மேலும், இந்த செயலாக்கம் சவ்வூடு பரவல் மூலம் நிகழும்.
 
உப்பினை பயன்படுத்தி உணவினை பாதுகாக்கும் முறையில் பாக்டீரியாவின் வளர்ச்சி தடைபடும். மேலும், நுண்ணுயிரிகளின் நொதி செயல்பாடும் தடுக்கப்படும்.
 
Important!
இறைச்சி, மீன், நெல்லிக்காய், மாங்காய், எலுமிச்சை மற்றும் முக்கியமாக ஊறுகாய் போன்ற கலன்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை பாதுகாக்க உப்பு பயன்படுகின்றது.
shutterstock612032495w300.jpg
ஊறுகாய் உப்பினைக் கொண்டு பாதுகாக்கப்படும் உணவு
 
சர்க்கரை
 
உணவில் சர்க்கரையை சேர்ப்பதன் மூலம் உணவில் உள்ள நீர் குறைக்கப்படும். அதாவது உணவின் ஈரப்பதம் குறைந்து உணவின் தன்மைப் பாதுகாக்கப்படும். மேலும், பழங்கள் போன்ற உணவுகளில் ஆக்ஸிஜனேற்றம் அடையாமலும் பாதுகாக்கின்றது.  
 
கனிகளில் இருந்து பெறப்படும் பழக்கூழ், ஜாம், ஜெல்லி போன்ற உணவுகளின் ஆயுள் காலத்தை அதிகரிக்க சர்க்கரை அல்லது தேன் சேர்க்கப்படுகின்றது.
 
shutterstock1548574208w300.jpg
தேனில் பாதுகாக்கப்படும் நெல்லி
  
எண்ணெய் மற்றும் வினிகர்
 
ஊறுகாய் போன்ற உணவுகளில் எண்ணெய் அல்லது வினிகர் சேர்க்கும்போது உணவுக்கும் காற்றில் உள்ள நுண்ணுயிரிக்கும் உள்ள தொடர்பு தவிர்க்கப்பட்டு உணவு பாதுகாக்கப்படும். இந்த செயல்முறையின் காரணமாக உணவில் நுண்ணுயிர் வளர்வது தடுக்கப்படும். மேலும் உணவின் பாதுகாப்பு மேம்படுகிறது.
 
shutterstock305492087w300.jpg
வெள்ளரி வினிகரில் பாதுகாக்கப்பட்டு உள்ளது