PDF chapter test TRY NOW

விலங்குலகத்தின் வகைப்பாட்டிற்கான அடிப்படை நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது.
  1. கட்டமைப்பு நிலை
  2. சீரமைப்பு
  3. கருமூல அடுக்கு
  4. உடற்குழியின் தன்மை
இவற்றில் ஒவ்வொன்றாக பின்வருமாறு விரிவாக காணலாம்.  
 
1. அமைப்பு நிலை:
 
செல்களின் எண்ணிக்கை,திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவற்றைக் கொண்டு உயிரினங்கள் ஒரு செல் உயிரி மற்றும் பல செல் உயிரி என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
 
PPT (2).png
அமைப்பு நிலையின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
 
2. கருமூல அடுக்குகள்:
 
கரு உருவாகத்தின்போது உருவாகும் அடிப்படை அலகு கருமூல அடுக்கு என்று கூறப்படும். பல செல் உயிரிகளை சுவரில் காணப்படும் அடுக்குகளின் அடிப்படையில் ஈரடுக்கு, மூவடுக்கு உயிரிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  
ஈரடுக்கு உயிரிகள் என்பவை புற அடுக்கு மற்றும் அக அடுக்கு என இரண்டு அடுக்குகளை கொண்ட உயிரினங்கள் ஆகும்.
Example:
ஹைட்ரா
மூவடுக்கு உயிரிகள் என்பவை புற அடுக்கு, நாடு அடுக்கு மற்றும் அக அடுக்கு என மூன்று வித கருமூல படலங்களைக் கொண்டவையாகும்.
Example:
முயல்
PPT (14).png
கருநிலை அடுக்குகளின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு 
  
3. சமச்சீர் தன்மை:
 
உடல் உறுப்புகள் அமைந்துள்ள முறையின் அடிப்படையில் ஆரச் சமச்சீர், இருபக்கச்  சமச்சீர் என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
ஆரச் சமச்சீர்:
 
உயிரினத்தின் உடலானது மைய அச்சினைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும். அந்த உயிரியின் உடலை எந்த ஒரு திசையில் மைய அச்சிலிருந்து பிரித்தாலும்ஒரே மாதிரியான சமமான இரண்டு பாகங்களாக பிரிக்க முடியும்.
Example:
நட்சத்திர மீன், ஹைட்ரா, ஜெல்லி மீன்
இருபக்கச் சமச்சீர்:
 
உயிரினத்தின் உடலானது மைய அச்சின் இரு புறமும் சமமாக அமைக்கப்பட்டிருக்கும். அந்த உயிரினத்தை மைய அச்சின் வழியாக பிரித்தால் மட்டுமே இரு சம பாகங்கள் கிடைக்கும்.
Example:
முதலை, தவளை, ஆடு
PPT (9).png
சமச்சீர் தன்மையின் அடிப்படையில் உயிரினங்களின் வகைப்பாடு
Reference:
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3e/Organization_levels_mouse.svg/1024px-Organization_levels_mouse.svg.png
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Figure_33_01_01.jpg/1024px-Figure_33_01_01.jpg
https://upload.wikimedia.org/wikipedia/commons/6/66/Figure_27_02_04.png