PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoபெருக்குத் தொடர் வரிசையின் \(n\) வது உறுப்பு பற்றி காணலாம்.
பெருக்குத் தொடர் வரிசையின் பொது வடிவம் \(a\), \(ar\), \(ar^2\),\(...ar^{n - 1}\) என்பது நமக்குத் தெரியும்.
இங்கு, \(a\) என்பது முதல் உறுப்பு மற்றும் \(r\) என்பது பொது விகிதம் ஆகும்.
\(\text{முதல் உறுப்பு}= t_1 = a \times r^0 = a \times 1 = a\)
\(\text{இரண்டாம் உறுப்பு}= t_2 = a \times r^1 = ar\)
\(\text{மூன்றாம் உறுப்பு}= t_3 = a \times r^2 = ar^2\)
\(.\) \(.\)
\(.\) \(.\)
\(.\) \(.\)
\(.\) \(.\)
\(.\) \(.\)
\(\text{n வது உறுப்பு}= t_{n} = a \times r^{n - 1} = ar^{n - 1}\)
எனவே, பெருக்குத் தொடர் வரிசையின் \(n\) வது உறுப்பு \(ar^{n - 1}\).