Theory:

எந்த முழு எண்ணிலும் \(0\) (பூச்சியம்) மற்றும் \(1\) (ஒன்று) பெருக்கினால் முடிவு (அல்லது) தொகை மாறாது. இது முழு எண்களின் அடையாளப் பண்பு எனப்படும்.
\(0\) (பூச்சியம்)ன் அடையாளப் பண்பு:
எந்த ஒரு எண்ணுடனும் பூச்சியத்தைக் கூட்டினால் அல்லது கழித்தால் அதே எண் கிடைக்கும். இதுவே கூட்டல் சமனிப் பண்பு எனப்படும்.
\(a\) ஒரு முழு எண் என்று கருதுங்கள்:
\(a + 0 = a\).
\(a - 0 = a\).
Example:
i) \(10 + 0 = 10\).
 
ii) \(8 - 0 = 8\).
\(1\) (ஒன்று)ன் அடையாளப் பண்பு:
\(1\) இன் அடையாளப் பண்பு, எந்த எண்ணையும் \(1\) ஆல் பெருக்கினால் அல்லது வகுத்தால் அது அப்படியே இருக்கும்.
\(a\) ஒரு முழு எண் என்று கருதுங்கள்:
 
(a×1)=a(a÷1)=a
Example:
i) \( 10 × 1 = 10 \)
 
ii) \( 10 ÷ 1 = 10 \)
\(0\) (பூச்சியம்) ஒரு கூட்டல் அடையாளம் என்றும், \(1\) (ஒன்று) பெருக்கல் அடையாளம் என்றும் அழைக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.