PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
பகா காரணியாக்கம் என்பது பகு எண்ணை அதன் பகா காரணிகளின் பெருக்கற்பலனாக எழுதுதல்.
\(12\) என்ற எண்ணை கீழ்கண்டவாறு எழுதலாம்.
 
\(12 = 4 \times 3\)
 
\(4\) என்பதை \(2 \times 2\) என எழுதலாம்.
 
\(12 = 2 \times 2 \times 3\)
 
எனவே, \(12\) இன் பகா காரணி \(2 \times 2 \times 3\) ஆகும்.
பகா  காரணிகள் காணும் வழிகள்:
 
பகா காரணிகளை கீழ்கண்ட இரு முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் காணலாம்.
 
1. காரணிச் செடி முறை
 
2. வகுத்தல் முறை
காரணிச் செடி முறை:
Example:
\(48\) என்ற எண்ணை காரணிச் செடி மூலம் பகா காரணிகளாகப் பிரித்து எழுதுக.
 
GIF_48.gif
 
எனவே, \(48\) \(=\) \(2 \times 2 \times 2 \times 2 \times 3\).
வகுத்தல் முறை:
Example:
\(27\) என்ற எண்ணை வகுத்தல் முறையில் பகா காரணிகளாக எழுதவும்.
 
தீர்வு:
 
Screenshot_73.png
 
எனவே, \(27\) \(=\) \(3 \times 3 \times 3\)