PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
நீங்கள் எப்போதாவது ஒரு நூலகத்திற்குச் சென்றிருக்கிறீர்களா?
 
ஆம் எனில், புத்தகங்கள் பாட வகை வாரியாக அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். நமக்கு ஏதேனும் வரலாற்றுப் புத்தகம் தேவைப்பட்டால், அதை ஒரு வரலாற்றுப் பகுதியில் காணலாம். வரலாற்றுப் புத்தகத்தை கலைப் பிரிவிலோ அல்லது பொருளாதாரப் பிரிவிலோ காண முடியாது. ஒவ்வொரு புத்தகத்தையும் துறை வாரியாக பிரித்து வைத்திருப்பர். ஒரு புத்தகத்தை விரைவாகக் கண்டறிய இந்த முறையைப் பயன்படுத்துகிறோம்.
 
இதேபோல், பயனருக்கு சிறந்த மற்றும் எளிதான புரிதலை வழங்குவதற்காக, தரவுகள்  ஒரு குறிப்பிட்ட முறையில் பராமரிக்கப்படுகிறது. இவ்வாறு பராமரிக்கும் வழிகளில் ஒன்று நேர்க்கோட்டுக் குறி என்று அழைக்கப்படுகிறது.
 
நேர்க்கோட்டுக் குறி தரவு புள்ளிவிவரங்கள் பற்றிய துல்லியமான புரிதலை அளிக்கிறது. இந்த கருத்தை புரிந்து கொள்ள ஒரு உதாரணம் பார்க்கலாம்.
 
ஆசிரியர் \(20\) மாணவர்களிடம் அவர்களுக்கு பிடித்த விளையாட்டு பற்றிய பின்வரும் தரவுகளை சேகரித்தார். ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்ட ஒரு  குறியைப் பயன்படுத்தினார். ஒவ்வோர் மாணவர்களின் எண்ணிக்கையை நிகழ்வெண் என்கிறோம்.
பிடித்த விளையாட்டு
குறிகள்
நிகழ்வெண்
மட்டைப்பந்து
      
 \(10\)
கால்பந்து
  
\(6\)
கைப்பந்து
\(2\)
கூடைப்பந்து
\(2\)

குறியை குறிப்பிடுவது எளிதாக இருந்தாலும், ஒவ்வொரு குறியையும் எண்ணிக் கணக்கிட கடினமாக இருக்கும் மற்றும் நேரம் எடுக்கும். உதாரணமாக, என்றால் \(10\) மார்க் திட்டமிடப்பட்டுள்ளது, பத்து  குறியையும் தனித்தனியாக எண்ண வேண்டும், பிறகு மட்டுமே அதை உறுதிப்படுத்த முடியும். ஆனால், நேர்க்கோட்டுக் குறி முறையில் முதல் பார்வையில், தரவுகளின் எண்ணிக்கையைக் கூறலாம்.
 
நேர்க்கோட்டுக் குறியின் சிறப்பு என்னவென்றால், ஒவ்வொரு தகவலின் நிகழ்வும் ஒரு குத்துக்கோட்டுக் குறி '|' ஐக் கொண்டு குறிக்கும். ஒவ்வொரு ஐந்தாவது குறியும் முந்தைய நான்கு குறிகளின் ‘||||’ குறுக்கே IIII எனக் குறிக்கப்படுகிறது. இம்முறை நேர்க்கோட்டுக் குறிகளை எளிதாக எண்ணுவதற்கு உதவுகிறது.
 
பிடித்த விளையாட்டு
குறிகள்
நிகழ்வெண்
மட்டைப்பந்து
IIIIIIII
 \(10\)
கால்பந்து
IIIII
\(6\)
கைப்பந்து
\(\)II\(\)
\(2\)
கூடைப்பந்து
\(\)II\(\)
\(2\)
 
நேர்க்கோட்டுக் குறிகளைப் பயன்படுத்தித் தரவுகளை வகைப்படுத்தும் இந்த முறையே நிலையான திட்ட முறையாகும்.