PDF chapter test TRY NOW

கோட்டின் மீதுள்ள புள்ளியைப் பொறுத்து செங்குத்து கோடு வரைதல்:
படி 1: \(PQ\) என்ற நேர்க்கோடு வரைக.
 
படி 2: \(PQ\) என நேர்க்கோட்டில் எதாவது ஒரு பகுதியில் \(R\) என்ற புள்ளியைக் குறிக்கவும்.
 
படி 3: \(PQ\) என்ற கோட்டின் மீது \(PR\) நோக்கி மூலைமட்டத்தை வைக்கவும்.
 
படி 4: மூலைமட்டத்தின் மற்றொரு விளிம்பை ஒட்டி \(S\) இன் வழியே \(PR\) என்ற கோடு வரைக.
 
படி 5: \(RS\) என்ற கோடு \(PQ\)க்கு செங்குத்து கோடு ஆகும். \(\angle SRP =  \angle SRQ = 90^°\).
 
1.gif
 
கோட்டின் மேல் உள்ள புள்ளியில் இருந்து நேர்க்கோடு வரைதல்:
படி 1: \(AB\) என்ற நேர்க்கோடு வரைக.
 
படி 2: \(AB\) என்ற கோட்டிற்கு மேல் ஏதேனும் \(P\) என்ற புள்ளியை எடுத்துக்கொள்வோம்.
 
படி 3: மூலைமட்டத்தின் ஒரு பகுதி \(AB\) யிலும் மற்றொரு பகுதி \(P\)யிலும் வைக்கவும்.
 
படி 4: \(P\) லிருந்து \(PR\) என்ற நேர்க்கோடு வரைக.
 
படி 5: \(PR\) என்ற கோடு \(AB\) க்கு செங்குத்தாக இருக்கும். அதாவது,  \(PR \perp AB\) மற்றும் \(\angle PRA =  \angle PRB = 90^°\).
 
2.gif