
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்எண் கணித மற்றும் இயற்கணித கோவையை மரவுரு வரைபடமாக வரைதல் பற்றி பார்த்தோம்.
தற்போது, மரவுரு வரைபடத்தை எண் கோவை மற்றும் இயற்கணித கோவையாக வரைதல் பற்றி அறியலாம்.
Example:
கீழ்கண்ட மரவுரு வரைபடத்தை எண் கணித கோவையாக மாற்றுக.
தீர்வு:
கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தின் எண் கோவையை கீழிருந்து மேலாக காண வேண்டும்.
மேற்கண்ட படத்திலிருந்து கிடைக்கபெறும் கோவை \(4 - 3\).
இங்கு, கிடைக்கபெற்ற கோவையை அடைப்பு குறிக்குள் எழுத வேண்டும்.
எனவே, இங்கு கிடைக்கப்பெற்ற எண் கோவை \(=(4 - 3)\)
மேலும், கொடுக்கப்பட்ட மரவுரு வரைபடத்தின் எண் கோவை \(2 \times (4 - 3)\).