PDF chapter test TRY NOW

நாம் ஒரு கணக்கைத் தீர்க்கும் பொழுது தெரியாத எண் இருந்தால் அதை ஏதேனும் ஒரு மாறியாகக்  (ஆங்கில எழுத்து) கருதலாம்.
உதாரணமாக, மாறிகள் சம்பந்தப்பட்ட ஒரு கணக்கைப் பார்ப்போம்.
 
மது சில லட்டுகளை செய்து தட்டில் வைக்கிறாள். மது \(3\) லட்டுகளை சாப்பிடுகிறாள், மீதி \(12\) லட்டுகள் தட்டில் இருக்கின்றன எனில், அவள் செய்த லட்டுகள் எத்தனை?
 
இங்கே, மது செய்த லட்டுகள் நமக்குத் தெரியாது. அதனால், தெரியாத அந்த எண்ணை \(x\) என எடுத்துக் கொள்வோம்.
 
மது சாப்பிட்ட லட்டுகள் \(=\) \(3\)
 
மீதமுள்ள லட்டுகள் \(=\) \(12\)
 
மொத்த லட்டுகள் (தெரியாத எண்) \(=\) மது சாப்பிட்ட லட்டுகள் \(+\) மீதமுள்ள லட்டுகள்
 
\(x\) \(=\) \(3\) \(+\) \(12\)
 
\(x\) \(=\) \(15\)
 
எனவே, மது செய்த லட்டுகள் \(15\).
 
இவ்வாறாக தெரியாத எண்ணிற்கு பதில் நாம் மாறியை பயன்படுத்தலாம்.