PDF chapter test TRY NOW
அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான மாற்றங்கள்:
1. நீளம்:
\(1 \text{கி.மீ}= 1000 \text{மீ}\)
\(1 \text{மீ} = 100 \text{செ.மீ}\)
\(1 \text{ மீ}= 1000 \text{ மிமீ}\)
\(1 \text{ செ.மீ}= 10 \text{மிமீ}\)
2. எடை:
\(1 \text{கி.கி}= 1000 \text{கி}\)
\(1 \text{கி}= 1000 \text{மி.கி}\)
3. கண அளவு (கொள்ளளவு):
\(1 \text{கி. லி }= 1000 \text{லி }\)
\(1 \text{ லி }= 1000 \text{மி.லி} \)
1. \(25.38 \text{ கி.மீ}\) இல் இருந்து \(\text{மீ}\) ஆக மாற்றவும்.
\(1 \text{கி.மீ}= 1000 \text{மீ}\)
மேலின அலகினை கிழின அலகாக மாற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட அளவைப் \(10\)-இன் அடுக்குகளால் பெருக்க வேண்டும்.
\(25.38 \times 1000 = 25380\)
எனவே , \(25.38 \text{ கி.மீ}= 25380 \text{மீ}\).
2. \(955 \text{மி.கி}\) இல் இருந்து \(\text{கி}\) ஆக மாற்றவும்.
கீழின அலகினைக் மேலின அலகாக மாற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட அளவை \(10\) இன் அடுக்குகளால் வகுக்க வேண்டும்.
\(1 \text{கி}= 1000 \text{மி.கி}\)
\(\text{கி} = 1 \text{மி.கி}\)
\(= 0.955 \)
எனவே , \(955 \text{மி.கி}= 0.955 \text{கி}\).
3. \(56 \text{மி. லி}\) ஐ \(\text{ லி}\) இல் வெளிப்படுத்தவும்
கீழின அலகினைக் மேலின அலகாக மாற்றுவதற்குக் கொடுக்கப்பட்ட அளவை \(10\) இன் அடுக்குகளால் வகுக்க வேண்டும்.
\(1\text{லி} = 1000 \text{மி. லி}\)
\(\text{ மி. லி}= 1 \text{ லி}\)
\(= 0.056 \)
ஆகவே , \(56 \text{ மி. லி}= 0.056 \text{லி} \).