PUMPA - THE SMART LEARNING APP

Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!

Download now on Google Play
ஒரு கோட்டுத்துண்டினை இரு சமபாகங்களாகப் பிரிக்கும் செங்குத்துக்கோடானது, அக்கோட்டுத்துண்டின் செங்குத்து இரு சமவெட்டி எனப்படும்.
Example:
\(10\) \(\text{செ.மீ}\) நீளமுள்ள \(AB\) என்ற கோட்டுத்துண்டிற்கு செங்குத்து இரு சமவெட்டியை வரைக.
 
படி 1:
 
ஒரு நீளமான நேர்க்கோட்டை வரைக. அதன் மீது \(A\) என்ற புள்ளியினைக் குறித்து, அதிலிருந்து \(10\) \(\text{செ.மீ}\) தொலைவில் \(B\) என்ற புள்ளியினைக் குறிக்க. அதாவது, \(AB = 10 \ \text{செ.மீ}\).
 
C_50.png
 
படி 2:
 
\(A\) வை மையாகக் கொண்டு, \(AB\) இன் நீளத்தின் அரை பங்கைவிட அதிகமான ஆரமுடைய வட்டவிற்களை \(AB\) க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் அமையுமாறு வரைக.
 
C_51.png
 
படி 3:
 
தற்போது, \(B\) யை மையாகக் கொண்டு, அதே ஆரமுடைய வட்டவிற்களை \(AB\) க்கு மேலாக ஒன்றும், கீழாக ஒன்றும் முந்தைய விற்களை வெட்டுமாறு வரைக. விற்கள் வெட்டும் புள்ளியினை \(C\) மற்றும் \(D\) எனக் குறிக்க.
 
C_52.png
 
படி 4:
 
\(C\) மற்றும் \(D\) யினை இணைக்கவும். நேர்க்கோடு \(CD\) ஆனது நேர்க்கோடு \(AB\) யில் வெட்டும் புள்ளியினை \(O\) எனக் குறிக்கவும்.
 
C_53.png
 
\(CD\) ஆனது \(AB\) யின் செங்குத்து இரு சமவெட்டி ஆகும். \(AO\) மற்றும் \(BO\) வின் நீளங்களை அளக்கவும். \(AO = BO = 5 \ \text{செ.மீ}\) ஆகும்.