PDF chapter test TRY NOW

ஒரு கோணத்தை இரு சம அளவுகளாகப் பிரிக்கும் கோடு அல்லது கோட்டுத்துண்டு அக்கோணத்தின் இருசம வெட்டி எனப்படும்.
Example:
\(60^\circ\) இன் கோண இருசமவெட்டி வரைக.
 
படி 1:
 
பாகைமானியைப் பயன்படுத்தி \(\angle BAC =  60^\circ\) ஐ வரையவும்.
 
pic151.svg
 
படி 2:
 
\(A\) ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரமுடைய வட்டவில்லை \(AB\) மற்றும் \(AC\) யில் வெட்டுமாறு வரைக. அவ்வெட்டும் புள்ளிகளை \(E\) மற்றும் \(F\) எனும் முறையேக் குறிக்க.
 
pic161.svg
 
படி 3:
 
\(E\) ஐ மையமாகக் கொண்டு அதே ஆரத்தில் \(∠BAC\) இன் உட்புறத்தில் ஒரு வட்டவில் வரைக. இதே போல் \(F\) ஐ மையமாகக் கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில் வரைக. விற்கள் வெட்டும் புள்ளியினை \(G\) எனக் குறிக்க. \(AG\) ஐ இணைக்கவும்.
 
pic36.svg
 
\(AG\) ஆனது \(\angle BAC\) இன் கோண இருசமவெட்டி ஆகும்.