PDF chapter test TRY NOW
கோணங்களைப் பொறுத்து முக்கோணத்தின் வகைகள்:
- குறுங்கோண முக்கோணம்
- விரிகோண முக்கோணம்
- செங்கோண முக்கோணம்
ஒரு முக்கோணத்தின் அனைத்து கோணங்களும் \(90^\circ\) விட குறைவு எனில் அது ஒரு குறுங்கோண முக்கோணம் ஆகும்.
Example:
இங்கு, அனைத்து கோணங்களும் \(90^°\) விட குறைவு.
அதாவது, \(∠A=60^°, ∠B=50^°\) மற்றும் \(∠C=70^°\).
ஒரு முக்கோணத்தின் ஏதேனும் ஒரு கோணம் \(90^\circ\) எனில் அது ஒரு செங்கோண முக்கோணம் ஆகும்.
Example:
இங்கு, ஒரு கோணம் \(90°\), மற்ற இரு கோணங்கள் குறுங்கோணம் ஆகும்.
அதாவது, \(∠A=40^°, ∠B=50^°\) மற்றும் \(∠C=90^°\).
ஒரு முக்கோணத்தின் ஏதேனும் ஒரு கோணம் \(90^\circ\) எனில் அது ஒரு விரிகோண முக்கோணம் ஆகும்.
Example:
இங்கு, ஒரு கோணம் \(90°\) விட அதிகம் மற்றும் மற்ற இரு கோணங்கள் குறுங்கோணங்கள் ஆகும்.
அதாவது, \(∠A=120^°, ∠B=35^°\) மற்றும் \(∠C=25^°\).