
PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoமுக்கோணங்களின் சர்வசமத் தன்மையை உறுதிசெய்வதற்கு மேற்பொருத்தும் முறையைக்
கற்றுக்கொண்டோம். மிகவும் பயனுள்ள பொருத்தமான அளவீடுகளைப் பயன்படுத்தி
முக்கோணங்களின் சர்வசமத் தன்மையை சரிபார்க்கலாம். அவற்றை முக்கோணங்களின்
சர்வசமத் தன்மையைச் சரிபார்க்க உதவும் கொள்கைகளாக நாம் பின்வருமாறு அறிந்து
கொள்ளலாம்.
முக்கோணத்தை வரைய மூன்று அளவுகள்
மட்டுமே போதுமானதாகும். அம்மூன்று அளவுகள் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றாக
இருக்கலாம்.
1. மூன்று பக்கங்களின் அளவுகள் (அல்லது)
2. இரண்டு பக்க அளவுகள் மற்றும் கொடுக்கப்பட்ட பக்கங்களுக்கு
இடைப்பட்ட கோணம் (அல்லது)
3. இரண்டு கோணங்கள் மற்றும் கொடுக்கப்பட்ட கோணங்களைத்
தாங்கும் பக்கம்.
முக்கோணத்தின் சர்வசம் பற்றிய மூன்று கொள்கைகளைப் பற்றி காணலாம்.
கொள்கை | விளக்கம் |
பக்கம்-பக்கம்-பக்கம் கொள்கை (ப-ப-ப) | மூன்று பக்கங்களின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. |
பக்கம்-கோணம்-பக்கம் கொள்கை (ப-கோ-ப). | இரண்டு பக்க அளவுகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களுக்கு இடைப்பட்ட கோணம் கொடுக்கப்பட்டிருத்தல். |
கோணம்-பக்கம்-கோணம் கொள்கை (கோ-ப-கோ). | இரண்டு கோணங்கள் மற்றும் கொடுக்கப்பட்ட கோணங்களைத் தாங்கும் பக்கம் கொடுக்கப்பட்டிருத்தல். |