PDF chapter test TRY NOW
பல கோணங்களின் சர்வசமம் பற்றி பார்த்தோம்.
இப்பொழுது,முக்கோணத்தின் சர்வசமம் பற்றி காணலாம்.
மூன்று கோட்டுத்துண்டுகளால் அமைக்கப்படும் மூடிய வடிவமே முக்கோணம் என நாம்
அறிவோம்.
ஒரு முக்கோணத்தில் மூன்று பக்கங்களும், மூன்று கோணங்களும் உள்ளன.
சர்வசம முக்கோணங்கள்:
இரு
முக்கோணங்களில், ஒத்த பக்கங்களும், ஒத்த கோணங்களும் சமம் எனில், அவை சர்வசம
முக்கோணங்கள் எனப்படும்.
சர்வசம முக்கோணத்தின் பாகங்கள்.
கீழ்கண்ட இரு சர்வசம முக்கோணங்களை எடுத்துக்கொள்வோம்.
மேற்கண்ட படத்தில் \(\triangle ABC\) மற்றும் \(\triangle DEF\) ஆகியன சர்வசமம் என்பதைக் காணலாம்.
ஆனால், இங்கு, இரு முக்கோணங்களும் வெவ்வேறு நிலையில் உள்ளதை அறியலாம்.
முக்கோணங்கள் சர்வசம் எனவே, ஒத்த பக்கங்கள் மற்றும் கோணங்கள் சமமாக இருக்க வேண்டும்.
ஒத்த முனைகள்: \(A\) மற்றும் \(D\), \(B\) மற்றும் \(E\), மற்றும் \(C\) மற்றும் \(F\)
ஒத்த பக்கங்கள்: \(AB\) மற்றும் \(DE\), \(BC\) மற்றும் \(EF\), மற்றும் \(CA\) மற்றும் \(FD\)
ஒத்த கோணங்கள்: \(∠A\) மற்றும் \(∠D\), \(∠B\) மற்றும் \(∠E\), மற்றும் \(∠C\) மற்றும் \(∠F\)
சர்வசம முக்கோணம் ஒத்த பக்கங்கள் மற்றும் ஒத்த கோணங்களை மட்டும் சார்ந்தது அல்ல. ஒத்த முனைகளையும் சார்ந்தது.
\(ABC\) மற்றும் \(DEF\) ஆகியவற்றில் கீழ்கண்ட \(6\) ஒத்த கோணங்கள் இருக்கலாம்.
\(ABC\) \(DEF\)
\(ABC\) \(DFE\)
\(ABC\) \(EDF\)
\(ABC\) \(EFD\)
\(ABC\) \(FDE\)
\(ABC\) \(FED\)