PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரே மாதிரியான உருவ அமைப்பும் வடிவமும் கொண்ட இரு பொருட்கள் சர்வ சமம் என்று அழைக்கப்படுகிறது. இரண்டு உருவங்களும் ஒன்றின் மீது ஒன்று பொருந்துமாயின் அவை சர்வசம உருவங்களாகும்.
 
red_apples.png
 
இங்கு, \(A\) மற்றும் \(B\), என்ற இரு ஆப்பிள்களை பார்த்தல் ஒன்றில் ஒன்று சரியாக பொருந்துவதை அறிய முடிகிறது.
Example:
அன்றாட வாழ்வில் சர்வ சமம் பற்றி காணலாம்.
 
1. ஒரே பக்கெட்டில் உள்ள பிஸ்கட்கள்.
 
2. புத்தகத்தின் பக்கங்கள்
 
3. 50 ருபாய் மதிப்புள்ள பணத் தாள்கள
 
4. ஒரே வடிவம் மற்றும் மதிப்புடைய இரண்டு நாணயங்கள்
Important!
இரு பொருள்கள் அல்லது உருவங்களின் சர்வசமத் தன்மையை எவ்வாறு அறிவது?
 
உருவங்களின் சர்வசமத் தன்மையைச் சரிபார்த்தலுக்கு நாம் ஒன்றின் மீது ஒன்று பொருத்தும் முறையைப் பயன்படுத்துகிறோம்.
 
இம்முறையில், ஓர் உருவத்தைப் படி எடுத்து, படி எடுத்த உருவத்தை மற்றோர் உருவத்தின் மீது பொருத்துதல் வேண்டும்.
 
இரண்டு உருவங்களும் ஒன்றின் மீது ஒன்று பொருந்துமாயின் அவை சர்வசம உருவங்களாகும்.
 
இம்முறையில் படியெடுத்த உருவத்தை மடிக்கவோ நீட்டவோ செய்தல் கூடாது. ஆனால் நகர்த்தலாம் அல்லது சுழற்றலாம்.