PUMPA - SMART LEARNING
எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்
Book Free Demoவட்டம்:
ஒரு தளத்தில் உள்ள அனைத்து புள்ளிகளும் நிலையான புள்ளியிலிருந்து ஒரு நிலையான தூரத்தில் இருக்கும் போது வட்டம் என்று அழைக்கப்படுகிறது.
வட்டத்தின் மையத்திலிருந்து வட்டத்தின் மேல் உள்ள ஏதேனும் ஒரு புள்ளிக்கு வரையபடும் கோடு வட்டத்தின் ஆரம் ஆகும்.
1. வட்ட வளையத்தின் உள்ளே உள்ள புள்ளிகள்:
2. வட்டத்தின் மேல் உள்ள புள்ளிகள்:
3. வட்டத்திற்கு வெளியே உள்ள புள்ளிகள்:
நாண்: வட்டத்தின் மேல் உள்ள இரு புள்ளிகளை இணைக்கும் கோடு வட்டத்தின் நாண் ஆகும்.
விட்டம்: வட்டத்தின் மையம் வழியேச் செல்லும் நாண் வட்டத்தின் விட்டம் ஆகும்.
Important!
வட்டத்தின் விட்டத்தில் பாதி ஆரம் ஆகும்.
வட்டத்தின் விட்டம் \(d\) எனவும் ஆரம் \(r\) எனவும் பொதுவாக குறிக்கப்படும்.
எனவே, வட்டத்தின் ஆரம் \(r=\frac{d}{2}\).