PUMPA - THE SMART LEARNING APP
Take a 10 minutes test to understand your learning levels and get personalised training plan!
Download now on Google Playநிலவரைபடத்தில் வண்ணமிடல்:
வரைபடத்தை வரைவதற்கு குறைந்தபட்ச வண்ணங்களைக் கண்டறிவதே 'நிலவரைபடத்தில் வண்ணமிடலின்' நோக்கமாகும். நம் அன்றாட வாழ்வில் பல சிக்கல்களைப் பகுத்தறிந்து தீர்ப்பதற்க்கு இந்த சிந்தனை செயல்முறை உதவுகிறது.
வரைபட வண்ணமயமாக்கல் என்பது வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் அதன் வெவ்வேறு அம்சங்களில் வரைபடத்தை வரைவதற்கான எளிய செயலாகும்.
இப்போது கீழே உள்ள நமது கண்டங்களின் வரைபடத்தைக் கவனியுங்கள். ஒவ்வொரு கண்டமும் வெவ்வேறு வண்ணங்களில் இருப்பதை நாம் கவனிக்கலாம். எனவே, வரைபடத்தை வரைவதற்கு தேவையான அதிகபட்ச வண்ணங்கள் வரைபடத்தில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கைக்கு சமம்.

இந்த படத்தில் \(6\) வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதை விட குறைவான எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு நம்மால் வண்ணம் தீட்டி பகுதிகளை பிரிக்க முடியுமா?
முடியும். அடுத்தடுத்த பகுதிகள் ஒரே வண்ணங்களில் அமையாதவாறு வண்ணம் அடிக்கலாம். வரைபடத்தின் மையத்தைக் கண்டறிந்தால், அருகில் உள்ள எந்தப் பகுதியிலும் ஒரே வண்ணம் இல்லாத வண்ணங்களை எளிதாக அடிக்கலாம்.

மேலே உள்ள படத்தில், குறைந்தபட்சமாக \(4\) வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அடுத்தடுத்த பகுதிகள் ஒரே வண்ணங்களில் இருப்பதைத் தவிர்க்க, எதிர் பகுதிகள் ஒரே வண்ணத்தில் இருக்குமாறு வண்ணம் தீட்டலாம்.
வரைபடத்தில் வண்ணமிடல்:
வரலாற்றோடு தொடர்புடைய புவியியல் மற்றும் அரசியல் சார்ந்த நிலவரைபடங்களுக்கு வண்ணமிடுதலில் உள்ளச் சிக்கல்களை, பொதுவானச் சிக்கல்களோடுதொடர்புபடுத்துவது கணித்தில் ’வரைபட வண்ணமிடல்’ என்கிறோம்.
வரைபடத்தில் வண்ணமிடுதலின் முக்கிய குறிக்கோள்:
1. வரைபடத்தின் உச்சியைக் கண்டறிய வேண்டும்.
2. மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வண்ணங்களைப் பயன்படுத்த வேண்டும்.
3. அடுத்தடுத்த உச்சிகள் ஒரே வண்ணமாக அமையக் கூடாது.
Example:
கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைக் காண்க. இப்படத்தில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு வண்ணமிடுக.

இங்கு ஆறு உச்சிகள் கொடுக்கப்பட்டுள்ளன. நாம் அடுத்தடுத்த உச்சிகள் ஒரே வண்ணமாக இல்லாதவாறு வண்ணமிடுவோம்.

இங்கு நாம் \(3\) வண்ணங்களைக் கொண்டு வண்ணமிட்டுள்ளோம். இதை விடக் குறைவான எண்ணிக்கையிலான வண்ணங்களைக் கொண்டு நாம் இந்த படத்தை வண்ணமிட முடியாது. இதுவே வரைபடங்களில் வண்ணமிடும் முறையாகும்.