PDF chapter test TRY NOW
நாம் ஏற்கனவே பொது காரணி, மீப்பெரு பொது காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு பற்றி முந்தைய வகுப்புகளில் படித்துள்ளோம்.
பொது காரணி:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களுக்கான காரணிகளைக் கண்டறியும் போது, எண்களுக்கு இடையில் ஏதேனும் காரணிகள் பொதுவாக இருந்தால், அவை பொதுவான காரணிகள் எனப்படும்.
Example:
15, 45, மற்றும் 50 இன் பொது காரணி காண்க:
15 இன் காரணிகள் =1,3,5,15
45 இன் காரணிகள் =1,3,5,9,15,45
50 இன் காரணிகள் =1,2,5,10,25,50
எனவே, 15, 45, மற்றும் 50 இன் பொதுவான காரணிகள் 1 மற்றும் 5.
மீப்பெரு பொது காரணி:
பொதுவான காரணிகளில் அதிக மதிப்பு கொண்ட காரணி மீப்பெரு பொது காரணி(மீ.பொ.கா) ஆகும். இது மீப்பெரு பொது வகுத்தி(மீ.பொ.வ) எனவும் அழைக்கப்படுகிறது.
20 மற்றும் 15 இன் மீ.பொ.கா காண்க.
20 இன் காரணிகள் = 1, 2, 4, 5, 10, 20
15 இன் காரணிகள் = 1, 3, 5, 15.
20 மற்றும் 15 இன் பொது காரணிகள் 5.
எனவே, மீ.பொ.கா 5 ஆகும்.
மீ.பொ.கா காணும் வழிகள்::
இரண்டு முறைகளில் மீ.பொ.கா காணலாம்.
1. தொடர் கழித்தல் முறை
2. தொடர் வகுத்தல் முறை
தொடர் கழித்தல் முறை:
கீழ்காணும் படிகள் மூலம் தொடர் கழித்தல் முறையில் மீ.பொ.கா காணலாம்.
படி 1: இம்முறையில் m மற்றும் n என இரண்டு எண்களை எடுத்துக்கொண்டோமானால், m மற்றும் n
என்ற இரண்டு எண்களும் சமமாகும் வரை தொடர்ந்து கழித்தலைச் செய்தல் வேண்டும்.
படி 2: m >n ஆக இருந்தால், m = n ஆகும் வரை m - nஐ தொடரவும் அல்லது. m < n ஆக இருந்தால்,
m = n ஆகும் வரை n - m ஐ தொடரவும்.
Example:
144 மற்றும் 120 இன் மீ.பொ.கா காண்க.
படி 1: m = 144 மற்றும் n =120 என்க.
இங்கு, m > n.
படி 2: எனவே, n ஐ m லிருந்து கழிக்கவும்.
= 24
செயல்முறையைத் தொடர்ச்சியாக செய்ய கிடைப்பது,
= 96
= 72
= 48
= 24
= 0
எனவே, 144 மற்றும் 120 இன் மீ.பொ.கா 24.