PDF chapter test TRY NOW

பல்லுறுப்புக்கோவைகள்:
 
இயற்கணிதக் கோவைகளின் எண்ணிக்கை, திறன் வைத்து அதை வகைப்படுத்துவர்.
   
பல்லுறுப்புக்கோவை என்பது ஒரு சிறப்பு வகை இயற்கணித வெளிப்பாடாகும். ஒரு பல்லுறுப்புக்கோவையில், அனைத்து மாறிகளுக்கும் அதிகாரமாக முழு எண்கள் \((0, 1, 2, 3, 4,...)\)  மட்டுமே அமைந்திருக்கும்.
 
ஓருறுப்புக் கோவை
ஒரே ஒரு உறுப்பைக் கொண்ட இயற்கணித வெளிப்பாடு ஓருறுப்புக் கோவை எனப்படும்.
Example:
\(3xyz, 4m^2, −17a^13\) மற்றும் \(r^7\)
ஈறுருப்புக் கோவை:
இரண்டு உறுப்புகள் கொண்ட ஒரு இயற்கணித வெளிப்பாடு ஈறுருப்புக் கோவை என்று அழைக்கப்படுகிறது.
Example:
\(x−y^4, 6a+17b, 3m−15\) மற்றும் \(34u^2v+4u^4v^3\)
மூவுறுப்புக் கோவை:
மூன்று உறுப்புகளைக் கொண்ட இயற்கணித வெளிப்பாடு மூவுறுப்புக் கோவை எனப்படும்.
Example:
\(a+b−c, 2(x^2+5y+z), m^3+15n^2−37m\) மற்றும் \(2p^2q−5pq^2−29\)
பல்லுறுப்புக்கோவை
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்ட இயற்கணித வெளிப்பாடு பல்லுறுப்புக்கோவை எனப்படும்.
Example:
\(2p−q+3r^3−72s, m^4+n^3m−6m^2+14m^2n^2+56\) மற்றும் \(x^3+y^3−3xyz\) ஆகியவை பல்லுறுப்புக்கோவைகளாகும்.
இயற்கணித வெளிப்பாட்டைப் பெருக்கும்போது நினைவில் கொள்ள வேண்டிய குறிப்புகள்:
  1. அடிப்படைக் கணிதக் குறியீடுகளை கவனியுங்கள். அதாவது, இரண்டு கோவையிலும்  \((+,+)\) (அல்லது) \((-,-)\) போன்ற ஒரே மாதிரியானக் குறியீடுகளைக் கொண்டிருந்தால், முடிவு \(+\) குறியைக் கொண்டிருக்கும்.
  2. இரண்டு குறியீடுகளும் வெவ்வேறாக இருந்தால்  \((+,-)\) , முடிவு \(-\) குறியைக் கொண்டிருக்கும்.
  3. அதன் பின் ஒரே மாறிகளின் எண்கெழுக்களைப் பெருக்கவும்.
  4. மாறிகளின் அதிகாரங்களையும் பெருக்கவும்.