PDF chapter test TRY NOW

நான்கு பக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் போது சரிவகம் வரைதல் பற்றி காணலாம்.
Example:
\(\overline{AB}\) இணை \(\overline{CD}\), \(AB\) \(=\) \(9\) செ.மீ, \(BC\) \(=\) \(5\) செ.மீ, \(CD\) \(=\) \(6\) செ.மீ மற்றும் \(DA\) \(=\) \(6.5\) செ.மீ அளவுள்ள சரிவகம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
 
வரைமுறை:
 
படி 1: \(AB\) \(=\) \(9\) செ.மீ என்ற நேர்க்கோடு வரைக.
 
YCIND20220921_4481_Geometry_1-22.png
 
படி 2: \(AP\) \(=\) \(6\) என இருக்குமாறு \(AB\) இல் \(P\) என்ற புள்ளியைக் குறிக்கவும்.
 
YCIND20220921_4481_Geometry_1-23.png
 
படி 3: \(P\) மற்றும் \(B\) ஐ மையமாகக் கொண்டு \(6.5\) செ.மீ மற்றும் \(5\) செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக. அவை, \(C\) இல் வெட்டட்டும்.
 
YCIND20220921_4481_Geometry_1-24.png
 
படி 4: \(PC\) மற்றும் \(BC\) ஐ இணைக்க.
 
YCIND20220921_4481_Geometry_1-25.png
 
படி 5: \(C\) மற்றும் \(A\) ஐ மையமாகக் கொண்டு \(6\) செ.மீ மற்றும் \(6.5\) செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக. அவை, \(D\) இல் வெட்டட்டும்.
 
YCIND20220921_4481_Geometry_1-26.png
 
படி 6: \(AD\) மற்றும் \(CD\) ஐ இணைக்க.
 
YCIND20220921_4481_Geometry_1-27.png
 
படி 7: \(ABCD\) என்பது தேவையான சரிவகம் ஆகும். \(D\) லிருந்து \(AB\) க்கு வரையப்படும் செங்குத்துக்கோட்டின் நீளம் சரிவகம் \(ABCD\) இன் உயரம் ஆகும்.
 
YCIND20220921_4481_Geometry_1-28.png
 
சரிவகத்தின் பரப்பளவு காணுதல்:
 
சரிவகத்தின் பரப்பளவு \(=\) \(\frac{1}{2} \times h \times (a + b)\) சதுர அலகுகள்.
 
\(=\) \(\frac{1}{2} \times 5.8 \times (9 + 6)\)
 
\(=\) \(\frac{1}{2} \times 5.8 \times 15\)
 
\(=\) \(\frac{87}{2}\)
 
சரிவகம் \(ABCD\)  இன் பரப்பளவு \(=\) \(43.50\) செ.மீ \(^2\)