
PUMPA - SMART LEARNING
மதிப்பெண்கள் எடுப்பது கடினமா? எங்கள் AI enabled learning system மூலம் நீங்கள் முதலிடம் பெற பயிற்சியளிக்க முடியும்!
டவுன்லோடு செய்யுங்கள்மூன்று பக்கங்கள் மற்றும் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டால் சரிவகம் வரைவதைப் பற்றி காணலாம்.
Example:
\(\overline{AB}\) இணை \(\overline{CD}\), \(AB\) \(=\) \(9\) செ.மீ, \(BC\) \(=\) \(8\) செ.மீ, \(CD\) \(=\) \(8\) செ.மீ மற்றும் \(AC\) \(=\) \(13\) செ.மீ அளவுகளைக் கொண்ட சரிவகம் வரைக.
வரைமுறை:
படி 1: \(AB\) \(=\) \(9\) செ.மீ என்ற நேர்க்கோடு வரைக. \(A\) மற்றும் \(B\) ஐ மையமாகக் கொண்டு, முறையே \(13\) செ.மீ மற்றும் \(8\) செ.மீ வட்டவிற்கள் வரைக. அவை \(C\) இல் வெட்டட்டும்.

படி 2: \(AC\) மற்றும் \(BC\) ஐ இணைக்க.

படி 3: \(AB\) க்கு இணையாக \(CX\) வரைக.

படி 4: \(C\) ஐ மையமாகக் கொண்டு \(8\) செ.மீ அளவிலான வட்டவில்லானது \(CX\) ஐ \(D\) இல் வெட்டுமாறு வரைக.

படி 5: \(AD\) ஐ இணைக்க \(ABCD\) என்பது தேவையான சரிவகம் ஆகும்.
