PDF chapter test TRY NOW
நீளமும் அகலமும் கொடுக்கப்பட்டிருக்கும் போது செவ்வகம் வரைதல் பற்றி இங்கு காணலாம்:
Example:
\(ME = 10\) செ.மீ மற்றும் \(MN = 4\) செ.மீ அளவுகள் கொண்ட \(MEAN\) என்ற செவ்வகம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
வரைமுறை:
படி 1: \(ME = 10\) செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
படி 2: \(M\) இல், \(MX ⊥ ME\) ஐ வரைக.
படி 3: \(M\) ஐ மையமாகக் கொண்டு \(4\) செ.மீ ஆரமுள்ள வட்டவில் வரைக. அது \(MX\) ஐ \(N\) இல் வெட்டட்டும்.
படி 4: \(E\) மற்றும் \(N\) ஐ மையங்களாகக் கொண்டு, முறையே \(4\) செ.மீ மற்றும் \(10\) செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக. அவை \(A\) இல் வெட்டட்டும்.
படி 5: \(EA\) மற்றும் \(NA\) ஐ இணைக்க. \(MEAN\) என்பது தேவையான செவ்வகம் ஆகும்.
செவ்வகத்தின் பரப்பளவு காணுதல்:
\(\text{செவ்வகத்தின் பரப்பளவு} = \text{நீளம்} \times \text{அகலம்}\) சதுர அலகுகள்.
இங்கு, செவ்வகத்தின் நீளம் \(=10\) செ.மீ மற்றும் அகலம் \(=4\) செ.மீ.
செவ்வகத்தின் பரப்பளவு \(=10 \times 4=40\) செ.மீ\(^2\)