PDF chapter test TRY NOW
ஒரு பக்கம் மற்றும் ஒரு மூலைவிட்டம் கொடுக்கப்பட்டிருக்கும் போது சாய்சதுரம் வரைதல் பற்றி இங்கு காணலாம்.
Example:
\(PO = 6.5\) செ.மீ மற்றும் \(PS = 12\) செ.மீ அளவுகள் கொண்ட \(POSE\) என்ற சாய்சதுரம் வரைந்து அதன் பரப்பளவைக் காண்க.
படி 1: \(PO = 6.5\) செ.மீ அளவுள்ள கோட்டுத்துண்டு வரைக.
படி 2: \(P\) மற்றும் \(O\) ஐ மையங்களாகக் கொண்டு, முறையே \(12\) செ.மீ மற்றும் \(6.5\) செ.மீ ஆரமுள்ள வட்டவிற்கள் வரைக. அவை \(S\) இல் வெட்டட்டும்.
![YCIND_221007_4478_Geometry2_1.png](https://resources.cdn.yaclass.in/db7b802c-c825-4bd5-91de-f08e8ad0f5b9/YCIND2210074478Geometry21w400.png)
படி 3: \(PS\) மற்றும் \(OS\) ஐ இணைக்க.
![YCIND_221007_4478_Geometry2_2.png](https://resources.cdn.yaclass.in/d3f2d892-8cbf-486b-9a70-334046dbe011/YCIND2210074478Geometry22w400.png)
படி 4: \(P\) மற்றும் \(S\) ஐ மையங்களாகக் கொண்டு, ஒவ்வொன்றும் \(5\) செ.மீ ஆரமுள்ள இரு வட்டவிற்கள் வரைக. அவை \(E\) இல் வெட்டட்டும்.
![YCIND_221007_4478_Geometry2_3.png](https://resources.cdn.yaclass.in/18f61eb4-516a-4787-b37c-90c6baa3e3ea/YCIND2210074478Geometry23w400.png)
படி 5: \(PE\) மற்றும் \(SE\) ஐ இணைக்க. \(POSE\) என்பது தேவையான சாய்சதுரம் ஆகும்.
![YCIND_221007_4478_Geometry2_4.png](https://resources.cdn.yaclass.in/59842dc9-986c-4bda-8968-6af8891dab64/YCIND2210074478Geometry24w400.png)
படி 6: \(EO\) ஐ இணைத்து அளந்தால் சாய்சதுரத்தின் மற்றொரு மூலைவிட்டம் கிடைக்கும்.
![YCIND_221007_4478_Geometry2_5.png](https://resources.cdn.yaclass.in/ef8015b6-0618-480f-8927-bc262e33bb3f/YCIND2210074478Geometry25w400.png)
சாய்சதுரத்தின் பரப்பளவு காணுதல்:
\(\text{சாய்சதுரத்தின் பரப்பளவு}\) \(=\) \(\frac{1}{2}\) \(\times\) \(d_1\) \(\times\) \(d_2\)
\(\text{சாய்சதுரத்தின் பரப்பளவு}\) \(=\) \(\frac{1}{2}\) \(\times\) \(12\) \(\times\) \(5\)
\(= 60\) செ.மீ \(^2\)