PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
இதுவரை விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களை பற்றிக் கண்டோம்.
விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களை தன்னுள் அடக்கியவையே மெய்யெண்கள் ஆகும் . சுருக்கமாக, மெய் எண் என்பது, விகிதமுறு மற்றும் விகிதமுறா எண்களின் சேர்ப்பு ஆகும்.எனவே, மெய் எண் விகிதமுறு அல்லது விகிதமுறா எண்களை உள்ளடக்கியதாகும், மேலும் இது \(R\) ஆல் குறிக்கப்படுகிறது.
Important!
ஒவ்வொரு மெய் எண்ணையும் எண் கோட்டில் உள்ள ஒரு தனித்துவமான புள்ளியால் குறிக்கலாம். மாறாக, எண் கோட்டில் உள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு தனித்துவமான மெய் எண்ணைக் குறிக்கிறது.
எண்கோட்டில்  2 மற்றும் 3 குறிக்கும் செயல்முறை.
 
நாம் பிதாகரஸ் தேற்றம் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தி வர்க்க மூல எண்களை உருவாக்குகிறோம்.
 
'ஒரு செங்கோண முக்கோணத்தில் செம்பக்கத்தின் சதுரம் அதன் கால்களின் சதுரங்களின் கூட்டுத்தொகைக்குச் சமம்' என்று பிதாகரஸ் தேற்றம் கூறுகிறது.
 
படி 1: எண் கோட்டை வரைந்து மையப் புள்ளியை பூச்சியமாக பெயரிடவும்.
 
படி 2: பூச்சியத்தின் வலது பக்கத்தை \(1, 2, 3....\) என குறிக்கவும் மற்றும் இடது பக்கம்  \(-1, -2, -3..\) என குறிக்கவும்.
 
1.png
 
படி 3: நமக்கு முதன்மை வர்க்க மூல மதிப்பு தேவைப்படுவதால், அளவிடுவதற்கான எதிர்மறை பக்கத்தை நாம் கருத்தில் கொள்ள மாட்டோம்.
 
படி 4: \(0\) மற்றும் \(1\) க்கு இடையே உள்ள நீளத்தை அளந்து, \(1\) ற்க்கு செங்குத்தாக ஒரு கோடு வரையவும்.
 
12.png
 
படி 5: \(0\) மற்றும் ஒரு அலகு நீளம்  இருக்கும் புதிய கோட்டின் இறுதியை இணைக்கவும்.
 
படி 6: எனவே, நாம் ஒரு செங்கோண முக்கோணத்தைப் பெறுவோம்..
 
2.png
 
படி 7: முக்கோணத்தை குறியிட்டு, அதன் அடிப்பக்கம், உயரம் மற்றும் செம்பக்கத்தை காட்டவும்.  
 
படி 8: செம்பக்கத்தின் நீளத்தை பிதாகரஸ் தேற்றத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தீர்க்கலாம்.
 
3.png
 
OB2=OA2+AB2OB=OA2+AB2OB=12+12OB=2
 
படி 9: செம்பக்கத்தின் நீளத்தை ஆரமாக எடுத்து, மூலத்தை மையமாக வைத்து எடுத்து, எண் கோட்டில் ஒரு வளைவை வரைக.
 
படி 10: மையத்திற்கும் புது வளைவிற்கும் இடையில் உள்ள தூரமானது எண் கோட்டில்  எண் 2 இன் வர்க்கமாக குறிக்கப்பட்டுள்ளது. அவை \(OB = OP =\) 2.
 
4.png
  
படி 11:  செம்பக்கத்தினை (நீளத்தை) 2 அடித்தளமாக வைத்து, ஒரு அலகு நீளத்தை எடுத்து செம்பக்கத்தின் முடிவில் செங்குத்தாக ஒரு வளைவு வரைந்தால், நமக்கு அதன் விளைவாக மற்றொரு செங்கோண முக்கோணம் கிடைக்கும். அந்த செங்கோண முக்கோணத்தின்  செம்பக்கம் 22+12=2+1=3
 
5.png
படி 12: தற்பொழுது கிடைத்த செம்பக்கத்தின்  நீளத்தை எடுத்து எண் கோட்டில் ஒரு வளைவு வரைதல் எண் கோட்டில் 3 ஐக் குறிக்கும்.
 
6.png
 
படி 13: அதே வழியில், n1 க்குப் பிறகு, எந்தவொரு நேர்மறை முழு எண் \(n\) க்கும் n ஐக் குறியிடலாம்.