PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை சந்திக்குமனால், அவை எட்டு கோணங்களை உருவாக்குகிறது.
 
1.svg
 
படத்தில் \(m\) மற்றும் \(n\) என்ற கோடுகளை \(l\) என்ற குறுக்குவெட்டி வெட்டுவதால்,  
 
ஒத்த கோணங்கள் \(∠1\), \(∠2\); \(∠3\), \(∠4\); \(∠5\), \(∠6\) மற்றும் \(∠7\), \(∠8\) நேரிய கோணச்சோடிகள் ஆகும்.
 
இதை தவிர \(∠1\), \(∠3\); \(∠2\), \(∠4\); \(∠5\), \(∠7\) மற்றும் \(∠6\), \(∠8\) செங்குத்து எதிர்கோணங்கள் ஆகும்

கோணங்கள் பற்றி மேலும் விரிவாக காண்போம்:
 
ஒத்த கோணங்கள்:
 
\(∠1\) மற்றும் \(∠5\) என்ற ஜோடி \(l\) என்ற குறுக்குவெட்டியின் இடதுப்புறம் உள்ளது. \(∠1\) என்பது \(m\) என்ற கோட்டிற்கு மேலே உள்ளது மற்றும் \(∠5\) என்பது \(n\) என்ற கோட்டிற்கு மேலே உள்ளது.
 
மேலும், \(∠2\) மற்றும் \(∠6\) என்ற ஜோடி \(l\) என்ற குறுக்குவெட்டியின் வலதுப்புறம் உள்ளது. \(∠2\) என்பது \(m\) என்ற கோட்டிற்கு கீழே உள்ளது மற்றும் \(∠6\) என்பது \(n\) என்ற கோட்டிற்கு கீழே உள்ளது.
 
\(∠3\) மற்றும் \(∠7\) என்ற ஜோடி கோணங்கள் \(l\) என்ற குறுக்குவெட்டியின் வலதுப்புறம் குறிக்கப்பட்டுள்ளது . \(∠3\) என்பது \(m\) என்ற கோட்டிற்கு கீழே உள்ளது மற்றும் \(∠7\) என்பது \(n\) என்ற கோட்டிற்கு கீழே உள்ளது.
 
\(∠4\) மற்றும் \(∠8\) என்ற ஜோடி கோணங்கள் \(l\) என்ற குறுக்குவெட்டியின் இடதுப்புறம் குறிக்கப்பட்டுள்ளது. \(∠4\) என்பது \(m\) என்ற கோட்டிற்கு கீழே உள்ளது மற்றும் \(∠8\) என்பது \(n\) என்ற கோட்டிற்கு கீழே உள்ளது.
 
அனைத்து ஜோடி கோணங்கள் வெவ்வேறு முனைகளை கொண்டுள்ளது, இவை குறுக்குவெட்டியின் இடது அல்லது வலதுப்புறம் உள்ளது (\(l\)) என்பது \(m\) மற்றும் \(n\) என்ற கோட்டிற்கு கீழே உள்ளது. இவையே ஒத்த கோணங்கள் எனப்படும்.

மாற்று உள் கோணங்கள்:
 
3.svg
 
ஓவ்வொரு ஜோடி கோணங்களும் \(∠3\) மற்றும் \(∠5\), \(∠4\) மற்றும் \(∠6\) ஆகியவை \(l\) என்ற குறுக்குவெட்டியின் எதிர்எதிரே உள்ளது மேலும் \(m\) மற்றும் \(n\) என்ற கோடுகளுக்கு கீழே உள்ளது.எனவே, இவை மாற்று உள் கோணங்கள்.
  
மாற்று வெளி கோணங்கள்:
 
4.svg
 
ஓவ்வொரு ஜோடி கோணங்களும் \(∠1\) மற்றும் \(∠7\), \(∠2\) மற்றும் \(∠8\) ஆகியவை \(l\) என்ற குறுக்குவெட்டியின் எதிர்எதிரே உள்ளது மேலும் \(m\) மற்றும் \(n\)என்ற கோடுகளுக்கு கீழே உள்ளது. எனவே, இவை மாற்று வெளி கோணங்கள்.
 
மற்ற கோணங்கள் :
  • ஓவ்வொரு ஜோடி கோணங்களும் \(∠3\) மற்றும் \(∠6\), \(∠4\) மற்றும் \(∠5\) ஆகியவை \(l\) என்ற குறுக்கு வெட்டியின் ஒருப்புறம் குறிக்கப்பட்டுள்ளது மற்றும்  மேலும் \(m\) மற்றும் \(n\) என்ற கோடுகளுக்கிடையே உள்ளது. இக்கோணங்கள் \(m\) மற்றும் \(n\) என்ற கோடுகளுக்கு உட்புறமாகவும் மேலும் \(l\) என்ற குறுக்குவெட்டியைக் கொண்டுள்ளதால் இணை உள்கோணங்கள்.
5.svg
  • ஓவ்வொரு ஜோடி கோணங்களும் \(∠1\) மற்றும் \(∠8\), \(∠2\) மற்றும் \(∠7\) ஆகியவை \(l\) என்ற குறுக்கு வெட்டியின் ஒருப்புறம் குறிக்கப்பட்டுள்ளது மற்றும்    மேலும் \(m\) மற்றும் \(n\) என்ற கோடுகளுக்கிடையே உள்ளது. இக்கோணங்கள் \(m\) மற்றும் \(n\) என்ற கோடுகளுக்கு வெளிப்புறமாகவும் மேலும் \(l\) என்ற குறுக்குவெட்டியைக் கொண்டுள்ளதால் இவை இணை வெளிகோணங்கள்.
6.svg