PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
  • ஆயத்தொலைவுகளில் வரிசைப்படுத்தப்பட்ட ஜோடிகளைப் பயன்படுத்தி கார்ட்டீசியன் தளத்தில் உள்ள ஒரு புள்ளியின் நிலையைப் குறிப்பிடலாம். 
  • \((x, y)\), \((-x, y)\), \((-x,-y)\), \((x,-y)\) ஆகியவை வரிசை ஜோடிகள் எனப்படும். இது ஒரு கார்டீசியன் தளத்தில் உள்ள புள்ளி  \(I\), \(II\), \(III\) மற்றும் \(IV\) ஆகியவற்றில் எந்த காற்பகுதியில் இடம்பெறும் என்பதைக் குறிக்கின்றது.  
  • \(x\)-ஆயஅச்சிலுள்ள புள்ளி:
      
    \(x\)-ஆயஅச்சிலுள்ள புள்ளி என்பது \(x\)-அச்சில் அளவிடப்படும் \(y\)-அச்சிற்கு செங்குத்து தொலைவிலுள்ள தூரம் ஆகும்.
     
    \(y\)-ஆயஅச்சிலுள்ள புள்ளி:
     
    \(y\)-ஆயஅச்சிலுள்ள புள்ளி என்பது \(y\)-அச்சில் அளவிடப்படும் \(x\)-அச்சிற்கு செங்குத்து தொலைவிலுள்ள தூரம் ஆகும்.
     
    21.png
      
    1. \(y\)-அச்சிலிருந்து \(L\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(y\)-அச்சின் நேர் திசையில் \(LX=4\) அலகுகள் மற்றும் \(x\)-அச்சிலிருந்து \(L\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(x\)-அச்சின் நேர் திசையில் \(OL=3\) அலகுகள் ஆகும்.
    கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் புள்ளி \(L\) ஆனது முதல்  காற்பகுதியில்  அமைகிறது, இதை \((x, y)\) என குறிப்பிடலாம். இங்கு \(x=3\) மற்றும் \(y=4\) எனவே கார்டீசியன் தளத்தில் புள்ளி \(L\) ஆனது \((3,4)\) என குறிப்பிடப்படுகிறது.
    2. \(y\)-அச்சிலிருந்து \(M\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(y\)-அச்சின் நேர் திசையில் \(MX'=2\) அலகுகள் மற்றும் \(x\)-அச்சிலிருந்து \(M\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(x\)-அச்சின் எதிர் திசையில் \(OM=2\) அலகுகள் ஆகும்.
    கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் புள்ளி \(M\) ஆனது இரண்டாம் காற்பகுதியில்  அமைகிறது, இதை \((-x, y)\) என குறிப்பிடலாம். இங்கு \(x=4\) மற்றும் \(y=2\) எனவே கார்டீசியன் தளத்தில் புள்ளி \(M\) ஆனது \((-4,2)\) என குறிப்பிடப்படுகிறது.
    3. \(y\)-அச்சிலிருந்து \(N\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(y\)-அச்சின் எதிர் திசையில் \(NX'=3\) அலகுகள் மற்றும் \(x\)-அச்சிலிருந்து \(N\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(x\)-அச்சின் எதிர் திசையில் \(OX'=2\) அலகுகள் ஆகும்.
    கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் புள்ளி \(N\) ஆனது மூன்றாம் காற்பகுதியில்  அமைகிறது, இதை \((-x, -y)\) என குறிப்பிடலாம். இங்கு \(x=2\) மற்றும் \(y=3\) எனவே கார்டீசியன் தளத்தில் புள்ளி \(N\) ஆனது \((-2,-3)\) என குறிப்பிடப்படுகிறது.
    4. \(y\)-அச்சிலிருந்து \(Q\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(y\)-அச்சின் எதிர் திசையில் \(QX=3\) அலகுகள் மற்றும் \(x\)-அச்சிலிருந்து \(Q\) என்ற புள்ளியின் செங்குத்து தூரமானது \(x\)-அச்சின் நேர் திசையில் \(OX = 1\) அலகுகள் ஆகும்.
    கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தில் புள்ளி \(Q\) ஆனது நான்காம் காற்பகுதியில்  அமைகிறது, இதை \((x, -y)\) என குறிப்பிடலாம். இங்கு \(x=1\) மற்றும் \(y=3\) எனவே கார்டீசியன் தளத்தில் புள்ளி \(Q\) ஆனது \((1,-3)\) என குறிப்பிடப்படுகிறது.
    Important!
    நேர்மறை ஆயத்தொலைவின் மதிப்பை நேர் திசையிலும் எதிர்மறை ஆயத்தொலைவின் மதிப்பை எதிர் திசையிலும் அளவிடலாம்.