PUMPA - SMART LEARNING

எங்கள் ஆசிரியர்களுடன் 1-ஆன்-1 ஆலோசனை நேரத்தைப் பெறுங்கள். டாப்பர் ஆவதற்கு நாங்கள் பயிற்சி அளிப்போம்

Book Free Demo
ஓர் எழுத்து தனித்து நின்றோ, பல எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருவது சொல் என்பதை அறிந்தோம்.
 
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது சொற்றொடர் அல்லது தொடர் என்பதையும் அறிவோம்.
 
பால் பருகினான். வெண்முத்து.
 
என்னும் தொடர்களைப் பாருங்கள். இவை பாலைப் பருகினான், வெண்மையான முத்து என்னும் பொருள்களைத் தருகின்றன.
 
முதல் தொடரில் ‘ஐ’ என்னும் வேற்றுமை உருபும் அடுத்த தொடரில் ‘மை’ என்னும் விகுதியும் ‘ஆன’ என்னும் உருபும் மறைந்து நின்று பொருள் உணர்த்துகின்றன.
 
இவ்வாறு இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ தொக்கி (மறைந்து) வருமானால் அதனைத் தொகைநிலைத் தொடர் என்பர்.
 
இத்தொகைநிலைத் தொடர் :
 
1. வேற்றுமைத் தொகை
 
2. வினைத்தொகை
 
3. பண்புத்தொகை
 
4. உவமைத்தொகை
 
5. உம்மைத்தொகை
 
6. அன்மொழித்தொகை
 
என ஆறு வகைப்படும்.